அம்ரித் ராஜ், புனீத் கிருஷ்ணா இயக்கத்தில் மானவ் குணால், திலோத்தமா ஷோமே, ஸ்வேதா பாஸு நடித்துள்ள சீரிஸ் `Tribhuvan Mishra CA Topper'. பகலில் சார்ட்டட் அக்கௌண்டாக வேலை செய்யும் த்ரிபுவன் மிஷ்ரா, இரவில் பாலியல் தொழிலாளியாக பணியாற்றுகிறார். இவர் வாழ்வில் வரும் சிக்கல்களே படம். படத்தின் எல்லா எபிசோடில் அடல்ட் காட்சிகள் உண்டு என்பதால் லேப்டாப்பில் பார்ப்பது கிட்னிக்கு நல்லது.
Mukesh Prajapathi இயக்கத்தில் அஞ்சலி நடித்துள்ள சீரிஸ் `Bahishkarana’ . கிராம தலைவரை எதிர்த்து போராடும் ஒரு பெண்ணின் கதை.
சுராஜ் வெஞ்சாரமூடு நடிப்பில் நிதின் ரெஞ்சி பனிக்கர் இயக்கியுள்ள சீரிஸ் `Nagendran's Honeymoons'. நாகேந்திரன், ஐந்து பெண்களை மோசடி செய்து திருமணம் செய்து கொள்கிறார். இந்த உண்மை அவரின் மனைவிகளுக்கு தெரிந்த பின் என்ன ஆகிறது என்பதே கதை.
அசிம் அப்பாஸி இயக்கியுள்ள சீரிஸ் `Barzakh’. ரிசார்ட் ஓனர் தனது மூன்றாவது மற்றும் இறுதி திருமணத்திற்கு, தன் பிள்ளைகளை அழைத்து வருகிறார். அங்கு நடக்கும் விஷயங்களே கதை.
Alma Har'el இயக்கத்தில் Natalie Portman நடித்துள்ள சீரிஸ் `Lady in the Lake'. 60களில் பேல்டிமோரில் ஒரு வளரும் பத்திரிகையாளர், கொலை வழக்கு ஒன்றை விசாரிப்பது பற்றிய கதை.
2020ல் வெளியான `My Spy’ படத்தின் சீக்குவல் `My Spy: The Eternal City’. சிஐஏ ஏஜெண்ட் ஜே ஜே, ஸோஃபி மற்றும் அவளது கொயர் குழுவுடன் இத்தாலி செல்கிறார், கூடவே அங்கு அவருக்கு ஒரு மிஷன் காத்திருக்கிறது. அதை எப்படி செய்தார் என்பதே கதை.
Stelana Kliris இயக்கியிருக்கும் படம் `Find Me Falling’. தன்னுடைய ஆல்பம் தோற்ற பிறகு ராக்ஸ்டார் ஜான் ஆல்மேன் ஒரு தனி தீவுக்கு சென்றுவிடுகிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் விஷயங்களே கதை.
Gabriela Cowperthwaite இயக்கியிருக்கும் படம் `ISS’. பூமிக்கு மேலே உள்ள சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷனில் கண்டுபிடிக்கப்படும் ஒரு பிரச்சனை, அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளே கதை.
Shrek Forever After, Alvin and the Chipmunks: Chipwrecked, Trolls, The Lego Movie 2: The Second Part போன்ற அனிமேஷன் படங்களை இயக்கிய Mike Mitchell இயக்கிய அனிமேஷன் படம் `Kung Fu Panda'வின் நான்காவது பாகம். போ என்ற பாண்டா கரடி இம்முறை வரும் சவால்களை எப்படி சந்திக்கிறது என்பதே கதை.
முகமது ஆசிஃப் ஹமீத் இயக்கிய படம் `The Akaali’. ப்ளாக் மேஜிக் சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் தயாராகியிருக்கிறது.
சிவா இயக்கத்தில் அஜய் கோஷ் நடித்த படம் `Music Shop Murthy'. சிறுவயதிலிருந்து இசை மேல் ஆர்வம் கொண்ட மூர்த்தி, ஒரு மியூசிக் ஷாப் வைக்கிறார். அதிலிருந்து வருமானம் குறைவு என கடையை மூட சொல்லி குடும்பத்தினர் நிர்பந்திக்க, டிஜே கற்றுக் கொள்ள துவங்குகிறார். அதன் பின் நடப்பவையே கதை.
ப்ளஸ்ஸி இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடித்த படம் `Aadujeevitham’. பிழைப்பு தேடி சவுதி செல்லும் நஜீப், அங்கு சந்திக்கும் அவஸ்தைகளும், அங்கிருந்து தப்ப எடுக்கும் முயற்சிகளுமே கதை. நஜீப் என்பவரின் வாழ்வில் நடந்த நிகழ்வை வைத்து பென்யாமின் எழுதிய `ஆடுஜீவிதம்’ நாவலின் சினிமா வடிவமே படம்.
நவீன் இயக்கத்தில் உருவான படம் `Moorane Krishnappa'. வீரன்னா என்ற அரசியல்வாதி, ஊருக்குள் ரீ எலெக்ஷன் வரவைக்க செய்யும் விஷயங்களே படம்.
Benjamin Brewer இயக்கத்தில் Nicolas Cage நடித்த படம் `Arcadian’. ஒரு தந்தையும் அவரின் பதின் வயது இரட்டை மகன்களும் போராடும் போராட்டமே கதை.
Minari படம் இயக்கிய Lee Isaac Chung இயக்கியுள்ள படம் `Twisters’. சூறாவளி பாதிப்பை சரி செய்ய முயலும் ஒரு குழுவைப் பற்றிய படம்.
ராம ஜெயபிரகாஷ் இயக்கியுள்ள படம் `மாய புத்தகம்’. குருவின் கையில் கிடைக்கும் மாயபுத்தகமும், அதன் பின் நடப்பவையும் தான் கதை.
மகேஷ் நடித்துள்ள படம் `திமில்’. ஒரு இளைஞனின் வாழ்வில் வரும் சிக்கலை மையப்படுத்திய படம்.
தமிழில் அன்பறிவு படத்தை இயக்கிய அஷ்வின் ராம், தெலுங்கில் இயக்கியுள்ள படம் `Darling’. ஹனிமூனுக்கு பாரிஸ் செல்ல வேண்டும் எனப் பணம் சேர்க்கும் ராகவ், எதேர்ச்சையாக சந்திக்கும் அனந்தியை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் என்ன பிரச்சனைகள் எழுகிறது என்பதே கதை.
ஷிவாக்ஷ் இயக்கியிருக்கும் படம் `Accident or Conspiracy: Godhra'. குஜராத் கலவரத்தில் பெற்றோரை பறிகொடுத்த மாணவன், அதே கலவரத்தைப் பற்றிய கட்டுரை ஒன்றை தயார் செய்கிறான். அதற்கான தேடலில் அவன் தெரிந்து கொள்வது என்ன என்பதே கதை.
2009ல் வெளியான Good Newwz படத்தின் சீக்குவலாக உருவாகியிருக்கிறது `Bad Newz'. விக்கி கௌஷன், த்ரிம்தி டிம்ரி, அம்மி விர்க் நடித்திருக்கும் இப்படத்தை ஆனந்த் திவாரி இயக்கியிருக்கிறார். சலோனி இரட்டை குழந்தைகளுடன் கர்பமடைகிறார். ஆனால் அந்தக் குழந்தைகள் அகிலுடையதா? குர்பிருடையதா? என்ற குழப்பம் வர, அதனைத் தொடர்ந்து நடக்கும் கலாட்டாக்களே கதை.
Stephen Fry நடித்துள்ள படம் `Treasure'. பத்திரிகையாளர் ரூத், தனது குழந்தைப் பருவத்தில் வாழ்ந்த இடங்களை பார்க்க தன் தந்தையுடன் செல்கிறார். அங்கு நடக்கும் விஷயங்களே படத்தின் கதை.
Michael Mohan இயக்கியிருக்கும் படம் `Immaculate'. புதிய கான்வெண்ட்டுக்கு வரும் சிஸ்டர் சிசிலியா, அங்கு அமானுஷ்ய மர்மங்கள் இருப்பதை உணர்கிறார். அதன் பின் நடப்பவையே கதை.