இந்த வார ஓடிடி ரிலீஸ் புதிய தலைமுறை
ஓடிடி திரைப் பார்வை

அடேங்கப்பா! லப்பர் பந்து, கடைசி உலகப் போர், நந்தன், Transformers One|இந்த வார OTT, தியேட்டர் லிஸ்ட்!

Johnson

series

High on Kadhal (Tamil) Aha - Sep 16

அருண் வரதன் இயக்கியுள்ள சீரிஸ் `High on Kadhal’. விஜய் - நக்‌ஷத்ரா திருமணத்தம்பதிகள். அவர்களுக்குள் வரும் ஊடல்களும், கூடல்களுமே கதை.

Agatha: House of Harkness (English) Hotstar - Sep 18

மார்வல் கதாப்பாத்திரமான அகதாவை வைத்து உருவாகியிருக்கிறது `Agatha: House of Harkness'. வாண்டா விஷனில் அடைபட்ட அகதா அதன் பின் தப்பித்து என்ன செய்கிறார் என்பதே கதை.

Thalaivettiyaan Paalayam (Tamil) Prime - Sep 20

நாகா இயக்கத்தில் அபிஷேக், தேவதர்ஷினி, சேத்தன் நடித்துள்ள சீரிஸ் `தலைவெட்டியான் பாளையம்’. இந்தியில் மாபெரும் ஹிட்டான Panchayat சீரிஸின் தமிழ் ரீமேக். கிராம பஞ்சாயத்துக்கு செகரெட்ரியாக வரும் இளைஞன் சந்திக்கும் சவால்களே கதை.

The Mystery of Moksha Island (Telugu) Hotstar - Sep 20

அனிஷ் இயக்கியுள்ள சீரிஸ் `The Mystery of Moksha Island'. தீவு ஒன்றிற்கு பலரும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு சென்ற பின் நடக்கும் சம்பவங்களே கதை.

The Penguin (English) Jio Cinema - Sep 20

Craig Zobel இயக்கியுள்ள சீரிஸ் `The Penguin'. 2022ல் வெளியான தி பேட்மேன் படத்தில் வரும் பென்குயின் கதாப்பாத்திரம் கோத்தம் நகரின் க்ரைம் உலகத்தைக் கைப்பற்றுவதே கதை.

OTT

Sopathulu (Telugu) ETV win - Sep 19

ஆனந்த் வரதன் இயக்கிய படம் `Sopathulu’. இரு நண்பர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களே கதை.

Jo Tera Hai Woh Mera Hai (Hindi) Jio Cinema - Sep 20

ராஜ் திரிவேதி இயக்கத்தில் பரேஷ் ராவல் நடித்துள்ள படம் `Jo Tera Hai Woh Mera Hai '. மிதேஷ் மற்றும் ஒரு முதியவருக்கு இடையே நடக்கும் சம்பவங்களே கதை.

His Three Daughters (English) Netflix - Sep 20

Azazel Jacobs இயக்கியுள்ள படம் `His Three Daughters'. தந்தையை கவனித்துக் கொண்டு வாழும் சகோதரிகளின் வாழ்க்கையில் வரும் சிக்கல்கள், அதற்கான தீர்வுகளே கதை.

Post Theatrical Digital Streaming

Jaladhara Pumpset Since 1962 (Malayalam) Jio Cinema - Sep 15

ஆஷிஷ் சின்னப்பா இயக்கிய படம் `Jaladhara Pumpset Since 1962'. மிர்ணாளினி என்பவர் தன்னுடைய வாட்டர் பம்பை திருடியவனை கண்டுபிடிக்க சட்டத்தை நாடுகிறார், அதன் பின் நடக்கும் சம்பவங்களே கதை.

American Society of Magical Negros (English) Jio Cinema - Sep 15

Kobi Libii இயக்கிய படம் `American Society of Magical Negros’. மாயா ஜாலங்கள் செய்யும் கருப்பின மக்கள் குழு பற்றிய கதை.

Tiragabadara Saami (Telugu) Aha - Sep 19

ரவிக்குமார் இயக்கிய படம் `Tiragabadara Saami’. திருமணத்திற்குப் பிறகு கிரி தெரிந்து கொள்ளும் விஷயமும், அதன் விளைவுகளுமே கதை.

Pechi (Tamil) Aha - Sep 20

ராமச்சந்திரன் இயக்கிய படம் `பேச்சி’. காட்டுக்குள் கட்டப்பட்டிருக்கும் பேச்சியை, தவறுதலாக விடுவித்த பின் கிராமத்தில் நடக்கும் சம்பவங்களே கதை.

Saala (Tamil) Aha - Sep 20

மணிபால் இயக்கிய படம் `சாலா’. ராயபுரத்தில் இருக்கும் பார்வதி பாரை அடைய நினைக்கும் இரு கும்பல், அதற்காக நடக்கும் மோதல்களே கதை.

Coffee (Tamil) Aha - Sep 20

சாய் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான படம் `காஃபி’. ஒற்றை ஆளாக தன் தம்பியை வளர்த்தெடுக்கும் பெண்ணுக்கு நடக்கும் விஷயங்களே கதை.

Maruthi Nagar Subramanyam (Telugu) Aha - Sep 20

லக்‌ஷ்மன் இயக்கத்தில் ராவ் ரமேஷ் நடித்த படம் `Maruthi Nagar Subramanyam'. சுப்ரமணியம் அவரது வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்களை காமெடியாக சொல்லும் படம்.

Anandapuram Diaries (Malayalam) manorama MAX - Sep 20

ஜெய ஜோஷ் இயக்கிய படம் `Anandapuram Diaries’. பல தடைகள் கடந்து தனது படிப்பை முடிக்க வருகிறார் நந்தினி. அங்கு அவர் சந்திக்கும் நட்பும், சிக்கல்களுமே கதை.

Ruslaan (Hindi) Jio Cinema - Sep 21

கரண் லலித் இயக்கிய படம் `Ruslaan’. ரஸ்லன் ஒரு மிஷனுக்கு செல்கிறார், அது என்ன? வெற்றிகரமாக முடித்தாரா என்பதே கதை.

Theatre

Kadaisi Ulaga Por (Tamil) - Sep 20

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள படம் `கடைசி உலகப் போர்’. 2028ல் நிகழும் போர் அதன் காரணமும், விளைவுகளுமே கதை.

Lubber Panthu (Tamil) - Sep 20

தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள படம் `லப்பர் பந்து’. கிராமத்துப் பகுதியைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள். அவர்களுக்குள்ளான ஈகோ மோதல் என்ன பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பதே கதை.

Nandhan (Tamil) - Sep 20

இரா சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள படம் `நந்தன்’. ஒதுக்கப்பட்ட ஒருவன், அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கும் போது வரும் பிரச்சனைகளே கதை.

Dhonima (Tamil) - Sep 20

ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் காளி வெங்கட் நடித்துள்ள படம் `தோனிமா’. ஒரு எளிய குடும்பத்திற்குள் வரும் நாய்குட்டி, மேலும் அக்குடும்பத்தின் பிரச்சனைகள் இதுவே கதை.

Thozhar Cheguevera (Tamil) - Sep 20

அலெக்ஸ் இயக்கியுள்ள படம் `தோழர் சேகுவேரா’. கல்லூரியில் நடக்கும் அரசியலே கதை.

Alex AD : Sattam En Kayil (Tamil) - Sep 20

சாச்சி இயக்கத்தில் சதீஷ் நடித்துள்ள படம் `சட்டம் என் கையில்’. நகரில் நடக்கும் கொலைகள், சந்தேகத்தின் பேரில் கைதாகும் ஒரு இளைஞன். அதன் பின் என்ன நடந்தது என்பதே கதை.

Kozhipannai Chelladurai (Tamil) - Sep 20

சீனு ராமசாமி இயக்கியுள்ள படம் `கோழிப்பண்ணை செல்லதுரை’. செல்லதுரை என்ற இளைஞனின் வாழ்க்கையை சொல்லும் படம்.

Hide N Seek (Telugu) - Sep 20

பாசி ரெட்டி இயக்கியுள்ள படம் `Hide N Seek’. ஒரு போலீஸ் மற்றும் forensic agent இணைந்து, சீரியல் கில்லர் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிப்பதே கதை.

Yudhra (Hindi) - Sep 20

ரவி உட்யவர் இயக்கத்தில் சித்தார்த் சதுர்வேதி, மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் `Yudhra’. தனது குடும்பத்தை கொலை செய்தவனை பழி தீர்க்க முயற்சிக்கும் இளைஞனின் கதை.

Kahan Shuru Kahan Khatam (Hindi) - Sep 20

சௌரப் தேஷ்குப்தா இயக்கியுள்ள படம் `Kahan Shuru Kahan Khatam'. மணப்பெண்ணைப் பார்த்து காதல் கொள்ளும் ஒரு இளைஞன், அதைத் தொடர்ந்து நடக்கும் கலாட்டாக்களே படம்.

Never Let Go (English) - Sep 20

Alexandre Aja இயக்கியுள்ள படம் `Never Let Go'. அமானுஷ்ய சக்தியால் வேட்டையாடப்படும் குடும்பத்தின் போராட்டமே கதை.

Transformers One (English) - Sep 20

Josh Cooley இயக்கியுள்ள படம் `Transformers One'. எதிர்களாக இருக்கும் Optimus Prime மற்றும் Megatron, ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த மூலக்கதையை சொல்கிறது படம்.