இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...
Raj & DK இயக்கத்தில் சமந்தா, வருண் தவான் நடித்துள்ள சீரிஸ் `Citadel: Honey Bunny'. ஹாலிவுட் ஸ்பை சீரிஸ் Citadel-ன் இந்திய வெர்ஷனே இது. பிரிந்த ஜோடி, ஒரு மிஷனுக்கான ஒன்றிணைந்த பின் என்ன ஆகிறது என்பதே கதை.
Akshay Roy, Sunil Rodrigues இயக்கத்தில் அனுபம் கெர் நடித்துள்ள படம் `Vijay 69'. தனது 69வது வயதில் சைக்கிள் ரேஸில் கலந்து கொள்ள நினைக்கும் விஜய், என்ன சிக்கல்களை சந்திக்கிறார் என்பதே கதை.
சீனு ராமசாமி இயக்கிய படம் `கோழிப்பண்ணை செல்லதுரை’. செல்லதுரை என்ற இளைஞனின் வாழ்க்கையை சொல்லும் படம்.
கமல் இயக்கத்தில் ஷைன் டாம் சாக்கோ நடித்தபடம் `Vivekanandan Viralaanu'. விவேகானந்தன் செய்யும் அநீதிகளும், அதற்கு கிடைக்கும் பதிலடியுமே கதை.
முந்தைய மூன்று பாகங்களைப் போல Despicable Me நான்காம் பாகத்தையும் Chris Renaud இயக்கினார். இம்முறை க்ரூவுக்கு பிரச்சனையாக வந்து நிற்பது பள்ளிக்காலத்தில் க்ரூ செய்த ஒரு செயலால் Maxime Le Malக்கு உருவான பகை.
ரஜினிகாந்த் நடிப்பில் த செ ஞானவேல் இயக்கிய படம் `வேட்டையன்’. எக்கவுண்டர் ஸ்பெஷலிட் அதிகாரியும், அவர் சந்திக்கும் சவால்களுமே கதை.
கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், சைஃப் அலிகான் நடித்த படம் `Devara - Part 1'. கப்பலில் வரும் பொருட்களை கடத்தி வாழ்க்கை நடத்திவரும் தேவரா, ஒரு அசம்பாவிதம் நடந்த பின் மனம் மாறுகிறான். அதன் பின் என்ன ஆனது என்பதே கதை.
சந்தீப் இயக்கத்தில் சுஹாஸ் நடித்த படம் `Janaka Aithe Ganaka'. பிரசாத் - சங்கீர்த்தனா இருவரும் குடும்ப பொருளாதார நிலையால் உடனடியாக குழந்தை வேண்டாம் என நினைக்கிறார்கள். ஆனால் சங்கீர்த்தனா கர்பமாகிவிட அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
ஜிதின் லால் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்த படம் `Ajayante Rrandam Moshanam’. அஜயனுக்கு வரும் சிக்கலும் அதை அவன் எப்படி சரி செய்கிறான் என்பதுமே கதை.
ஹன்சல் மெஹ்தா இயக்கத்தில் கரீனா கபூர் நடித்த படம் `The Buckingham Murders'. ஜஸ்மீத் என்ற துப்பறியும் நிபுணரிடம், 10 வயது குழந்தையின் கொலை வழக்கு வருகிறது. அந்தக் கொலையாளியைத் தேடும் அவரது விசாரணையே கதை.
`Thanneer Mathan Dinangal’, `Super Sharanya', `Premalu' என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கிரிஷ் இயக்கியுள்ள படம் `I am Kathalan'. விஷ்ணுவுக்கு வரும் சிக்கலும், அதை எதிர்த்து அவனின் போரட்டமுமே கதை.
சுஜீத் - சந்தீப் இயக்கத்தில் கிரண் அப்பாவரம் நடித்துள்ள படம் `KA'. கிராமத்தில் தொடர்ந்து பல பெண்கள் காணாமல் போக, அதன் பின் இருக்கும் மர்மத்தை கண்டறிய முற்படும் ஒரு போஸ்ட்மேனின் கதை.
சுதீர்வர்மா இயக்கத்தில் நிகில் நடித்துள்ள படம் `Appudo Ippudo Eppudo’. ரிஷி என்ற இளைஞனின் பயணமே படத்தின் கதை.
ஜிதின் ராஜ் இயக்கியுள்ள படம் `Pallotty 90s Kids’. ஊருக்கு திரும்பும் தாமோதர், அவரது நண்பர்களை மீண்டும் சந்திக்கும் போது நிகழும் விஷயங்களே கதை.
நிஷாத் இயக்கத்தில் ஷைன் டாம் சாக்கோ நடித்துள்ள படம் `Oru Anweshanathinte Thudakkam’. ஒரு கொலைவழக்கின் விசாரணைகளே கதை.
முஸ்தஃபா இயக்கியுள்ள படம் `Mura’. நான்கு நண்பர்கள் இணைந்து ஒரு கொள்ளையை திட்டமிடுகிறார்கள். அதன்பின் நடப்பவையே கதை.
ரிஜேஷ் ஆண்டனி இயக்கத்தில் அஜூ வர்கீஸ், ஜானி ஆண்டனி நடித்துள்ள படம் `Swargam’. வெவ்வேறு பொருளாதார பின்னணி கொண்ட இரு குடும்பங்களுக்கு இடையே நிகழும் கதை.
`Back to the Future’ ட்ரையாலஜி, `Forrest Gump’, `Cast Away', `The Walk' போன்ற படங்களை இயக்கிய Robert Zemeckis தற்போது Tom Hanks, Robin Wright நடிப்பில் இயக்கியுள்ள படம் `Here’. ஒரு இடத்தின் கதையையும், அதன் மாற்றங்களையும் பற்றி சொல்லும் படம்.