இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் புதிய தலைமுறை
ஓடிடி திரைப் பார்வை

கொட்டுக்காளி | வாழை | ராயன் | Kalki 2898 AD | இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ..!

Johnson

கொட்டுக்காளி, வாழை, ராயன், Kalki 2898 AD, உறவுகள் தொடர்கதை, Hunt என இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகும் படைப்புகளின் லிஸ்ட் இதோ..!

Documentary

Angry Young Men (Hindi) Prime - Aug 20

Angry Young Men

பாலிவுட் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட கதாசிரியர்கள் சலிம் கான் - ஜாவித் அக்தர் பற்றிய ஆவணத்தொடர் `Angry Young Men’. பல பாலிவுட் நட்சத்திரங்களுடன் சலீம் - ஜாவித்தும் இணைந்து பல விஷயங்களை இதில் பகிர்ந்துள்ளனர்.

OTT

Tikdam (Hindi) Jio Cinema- Aug 23

Tikdam

விவேக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `Tikdam’. ஒரு தந்தையும், அவரது இரு மகன்கள் பற்றிய எமோஷனல் படமாக உருவாகியிருக்கிறது.

In the Land of Saints and Sinners (English) Lionsgate Play - Aug 23

In the Land of Saints and Sinners

Robert Lorenz இயக்கத்தில் Liam Neeson நடித்துள்ள படம் `In the Land of Saints and Sinners'. கொலை செய்வதெல்லாம் வேண்டாம் என ரிட்டயர்மெண்டில் இருக்கும் ஒரு ஹிட்மேனுக்கு வேலை வருகிறது. அதை அவர் எப்படி முடித்தார் என்பதே கதை.

Drive-Away Dolls (English) Jio Cinema- Aug 23

Drive-Away Dolls

Ethan Jesse Coen இயக்கியுள்ள படம் `Drive-Away Dolls’. இரு தோழிகள் செல்லும் ஒரு ரோட் ட்ரிப்பில் நடக்கும் க்ரைம், அதன் பின் நடக்கும் விஷயங்கள் என்ன என்பதே கதை.

Incoming (English) Netflix - Aug 23

Incoming

Dave Chernin மற்றும் John Chernin இயக்கியுள்ள படம் `Incoming’. நான்கு நண்பர்கள் தங்களிம் முதல் ஹை ஸ்கூல் பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். அதை தொடர்ந்து நடப்பவையே கதை.

Post Theatrical Digital Streaming

Grrr... (Malayalam) Hotstar - Aug 20

Grrr

பிரித்விராஜ் நடிப்பில் எஸ்ரா என்ற ஹிட் படத்தைக் கொடுத்த ஜே கே, அடுத்து இயக்கிய படம் `Grrr'. விலங்குகள் சரணாலயத்தில் சிங்கம் இருக்கும் பகுதியில் இருவர் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் தப்பிக்க செய்யும் முயற்சிகளே கதை.

Jama (Tamil) Prime - Aug 21

ஜமா

பாரி இளவழகன் இயக்கி நடித்த படம் `ஜமா’. தெருக்கூத்துகளில் பெண் வேடமிடும் கலைஞனும், அவன் சந்திக்கும் பிரச்சனைகளுமே கதை.

Kalki 2898 AD (Telugu) Prime - Aug 22

Kalki 2898 AD

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடித்த படம் `Kalki 2898 AD'. எதிர்கால உலகத்தில் சைன்ஸையும் சாமியையும் கலந்து கட்டி ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

Viraaji (Telugu) Aha - Aug 22

Viraaji

அத்யாத் இயக்கிய படம் `Viraaji’. நான்கு பேர் கொண்ட குழு, ஒரு திருமணத்திற்கு செல்கிறது. அங்கு நடக்கும் கலாட்டாக்களே கதை.

Raayan (Tamil) Prime - Aug 23

ராயன்

தனுஷ் இயக்கி நடித்த படம் `ராயன்’. தன் குடும்பத்துக்கு வரும் ஆபத்திலிருந்து பாதுகாக்க நினைக்கும் அண்ணனுக்கு வரும் தடைகள், அதை எப்படி கடக்கிறார் என்பதே கதை.

Unarvugal Thodarkadhai (Tamil) Aha - Aug 23

உறவுகள் தொடர்கதை

பாலு ஷர்மா இயக்கத்தில் உருவான படம் `உறவுகள் தொடர்கதை’. கார்த்திக் - ப்ரியா இவர்களின் திருமண வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களே படம்.

Swakaryam Sambhavabahulam (Malayalam) manoramaMAX - Aug 23

Swakaryam Sambhavabahulam

நசீர் இயக்கத்தில் உருவான படம் `Swakaryam Sambhavabahulam'. ஒரு கிராமத்திலிருக்கும் சில நபர்களின் வாழ்க்கை ஒரு சம்பவத்தால் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதே கதை.

Theatre

Vaazhai (Tamil) - Aug 23

வாழை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `வாழை’. நிஜ சம்பவம் ஒன்றைத் தழுவிய படமாக உருவாகியிருக்கிறது.

Kottukkali (Tamil) - Aug 23

கொட்டுக்காளி

வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, ஆனா பென் நடித்துள்ள படம் `கொட்டுக்காளி’. மீனா என்ற பெண்ணுக்கு அவளின் குடும்பம் என்னவெல்லாம் செய்கிறது என்பதே கதை.

Pogumidam Vegu ThooramIlai (Tamil) - Aug 23

போகுமிடம் வெகு தூரமில்லை

மைக்கேல் ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ் நடித்துள்ள படம் `போகுமிடம் வெகு தூரமில்லை’. அமரர் ஊர்தி ஓட்டுநர், ஒரு பிணத்தை எடுத்துச் செல்லும் பயணமே கதை.

Atharma Kathiagal (Tamil) - Aug 23

அதர்ம கதைகள்

காமராஜ் இயக்கியுள்ள படம் `அதர்ம கதைகள்’. நான்கு வெவ்வேறு நபர்களின் பழி தீர்க்கும் படலமே கதை.

Saala (Tamil) - Aug 23

சாலா

மணிபால் இயக்கியிருக்கும் படம் `சாலா’. ராயபுரத்தில் இருக்கும் பார்வதி பாரை அடைய நினைக்கும் இரு கும்பல், அதற்காக நடக்கும் மோதல்களே கதை.

Maruthi Nagar Subramanyam (Telugu) - Aug 23

Maruthi Nagar Subramanyam

லக்‌ஷ்மன் இயக்கத்தில் ராவ் ரமேஷ் நடித்துள்ள படம் `Maruthi Nagar Subramanyam'. சுப்ரமணியம் அவரது வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்களை காமெடியாக சொல்லும் படம்.

Footage (Malayalam) - Aug 23

Footage

சைஜூ ஸ்ரீதரன் இயக்கத்தில் மஞ்சு வாரியர், வைஷாக் நாயர், காயத்ரி அஷோக் நடித்துள்ள படம் `Footage'. ஒரு மர்மமான வீடியோ ஃபுட்டேஜும், அதற்காக நடக்கும் போராட்டமுமே கதை.

Palum Pazhavum (Malayalam) - Aug 23

Palum Pazhavum

வி கே பிரகாஷ் இயக்கத்தில் மீரா ஜாஸ்மின், அஷ்வின் நடித்துள்ள படம் `Palum Pazhavum’. 23 வயதான சுனிலுக்கு ஃபேஸ்புக்கில் அறிமுகமான 33வயது சுமியுடன் காதல். இதில் வரும் சிக்கல்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதே கதை.

Thaanara (Malayalam) - Aug 23

Thaanara

ஹரிதாஸ் இயக்கத்தில் அஜூ வர்கீஸ் நடித்துள்ள படம் `Thaanara'. அஞ்சலி - ஆதர்ஷ் இவர்களின் திருமண வாழ்வில் வரும் சிக்கலும், அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களுமே கதை.

Hunt (Malayalam) - Aug 23

Hunt

சாஜி கைலாஷ் இயக்கத்தில் பாவனா நடித்துள்ள படம் `Hunt'. டாக்டர் கீர்த்தி கண்டுபிடிக்க நினைக்கும் ஒரு உண்மையும், அதன் பின் இருக்கும் மர்மங்களுமே கதை.

Blink Twice (English) - Aug 23

Blink Twice

நடிகை Zoë Kravitz இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் `Blink Twice'. பணக்காரர் ஒருவரின் பார்ட்டிக்கு செல்கிறார்கள் இரு பெண்கள். அதில் ஒருவர் திடீரென காணாமல் போனதும் என்ன ஆகிறது என்பதே கதை.

Alien: Romulus (English) - Aug 23

Alien Romulus

Fede Alvarez இயக்கியுள்ள படம் `Alien: Romulus'. 1979ல் வெளியான Alien மற்றும் 1986ல் வெளியான Aliens படங்களுக்கு இடைப்பட்ட கதைதான் இது. இளம் விண்வெளி வீரர்கள், ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள். அங்கு அவர்கள் ஏலியனால் எதிர்கொள்ளும் பிரச்சனையே கதை.