இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் புதிய தலைமுறை
ஓடிடி திரைப் பார்வை

The GOAT | Boat | SWAG | 35 Chinna Katha Kaadu | இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...

Johnson

The GOAT, Boat, SWAG, 35 Chinna Katha Kaadu என இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...

Series

Manvat Murders (Marathi) SonyLIV - Oct 4

Manvat Murders

`Aatmapamphlet' படம் இயக்கிய ஆஷிஷ் அவினாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் `Manvat Murders'. ஒன்றரை வருடங்களாக தீர்க்க முடியாத கேஸ், எழுவரின் கொலை. இதற்காக மும்பையில் இருந்து வரும் அதிகாரி ராம்நாத் குல்கர்னி, என்ன செய்கிறார் என்பதே கதை

OTT

House of Spoils (English) Prime - Oct 3

House of Spoils

Bridget Savage Cole மற்றும் Danielle Krudy இயக்கியுள்ள படம் `House of Spoils'. புதிய உணவகம் ஒன்றைத் துவங்கும் செஃப் சந்திக்கும் பிரச்சனைகளே கதைக்களம்.

Hold Your Breath (English) Hotstar - Oct 3

Hold Your Breath

Karrie Crouse மற்றும் Will Joines இயக்கியுள்ள படம் `Hold Your Breath'. ஒரு அசாதாரண சூழலில் தனது குடும்பத்தை காப்பாற்ற போராடும் பெண்ணின் கதை.

Amar Prem Ki Prem Kahani (Hindi) Jio Cinema - Oct 4

Amar Prem Ki Prem Kahani

ஹர்திக் கஜ்ஜர் இயக்கும் படம் `Amar Prem Ki Prem Kahani'. அமர் - ப்ரேம் இவர்களது வாழ்வில் வரும் சிக்கலும், அதைத் தீர்க்கும் முயற்சிகளுமே கதை.

Balu Gani Talkies (Telugu) Aha - Oct 4

Balu Gani Talkies

விஷ்வநாத் பிரதாப் இயக்கியுள்ள படம் `Balu Gani Talkies’. பி க்ரேட் படங்களை மட்டும் திரையிடும் தியேட்டரில், எப்படியாவது பாலகிருஷ்ணா படத்தை ஓட்ட வேண்டும் என நினைக்கிறான், பாலு. அந்த முயற்சி பலித்ததா என்பதே கதை.

CTRL (Hindi) Netflix - Oct 4

CTRL

விக்ரமாதித்யா மோத்வானே இயக்கத்தில் அனன்யா பாண்டே நடித்துள்ள படம் `CTRL’. நெல்லா - ஜோ இருவரும் காதலர்கள். ஜோவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு எனத் தெரிந்த பின் நெல்லா செய்யும் ஒரு விஷயம் விபரீதத்தில் முடிகிறது. அது என்ன என்பதே கதை.

The Signature (Hindi) Zee5 - Oct 4

The Signatur

கஜேந்திரா அஹிரே இயக்கத்தில் அனுபம் கெர் நடித்துள்ள படம் `The Signature'. உடல்நிலை சரியில்லாத மனைவியை காப்பாற்ற போராடும் கணவனின் கதை.

Colourrs of Love (Hindi) Zee5 - Oct 4

Colourrs of Love

திவ்யேஷ் லிம்பானி இயக்கியுள்ள படம் `Colourrs of Love’. ப்ரேக் அப் நடந்த பின் அவீ துவண்டு போய் டிப்ரஷனாகிறார். அவரை தேற்ற வரும் சைக்காலஜிஸ்ட் ரஜத், அவீயை மாற்ற முடிந்ததா என்பதே கதை.

It’s What’s Inside (English) Netflix - Oct 4

It’s What’s Inside

Greg Jardin இயக்கியுள்ள படம் `It’s What’s Inside'. திருமணத்துக்கு முந்தைய பார்ட்டி ஒன்றில் அழையா விருந்தாளி ஒருவர் தன் சூட்கேஸுடன் கலந்து கொண்ட பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

The Platform 2 (Spanish) Netflix - Oct 4

The Platform 2

Galder Gaztelu-Urrutia இயக்கத்தில் 2019 வெளியான `The Platform' படத்தின் சீக்குவல் உருவாகியிருக்கிறது. உணவுக்காக நடக்கும் யுத்தம் இப்பாடகத்திலும் தொடர்கிறது.

Post Theatrical Digital Streaming

The Strangers: Chapter 1 (English) Prime - Sep 29

The Strangers Chapter 1

Deep Blue Sea, Die Hard 2 படங்களை இயக்கிய Renny Harlin தற்போது இயக்கியுள்ள படம் `The Strangers Trilogy'. மூன்று பாகங்களில், முதல் பாகம் இப்போது வெளியாகவுள்ளது. பயணத்தில் இருக்கும் ஒரு இளம் ஜோடி, வழியில் தங்கிவிட்டு செல்ல ஓரிடத்தில் தஞ்சமடைகிறார்கள், அங்கு அவர்களை பயமுற்றுத்தும் மூன்று முகமூடி நபர்கள் வர, அதன் பின் நடப்பவையே கதை.

Boat (Tamil) Prime - Oct 1

Boat

சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்த படம் `போட்’. படகு ஒன்றில் தப்பித்துச் செல்லும் 10 நபர்களும், அவர்களின் சர்வைவல் போராட்டமுமே கதை.

Challengers (English) Prime - Oct 1

Challengers

Call Me by Your Name, Bones and All போன்ற படங்களின் இயக்குநர் Luca Guadagnino இயக்கிய படம் `Challengers’. டென்னிஸ் கோச்சான தஷி, தனது கணவரின் டென்னிஸ் திறமையை மீட்டுக் கொண்டுவர செய்யும் செயல்கள் என்ன என்பதே கதை.

When Evil Lurks (Spanish) Prime - Oct 1

Demián Rugna இயக்கிய படம் `When Evil Lurks'. ஊருக்குள் புகுந்த தீய சக்தியை துரத்த நினைக்கும் சகோதரர்களுக்கு என்ன ஆகிறது என்பதே கதை.

35-Chinna Katha Kaadu (Telugu) Aha - Oct 2

35 Chinna Katha Kaadu

நந்தா கிஷோர் இயக்கத்தில் நிவேதா தாமஸ் நடித்த படம் ` 35-Chinna Katha Kaadu'. மகன் பரிட்ச்சையில் மதிப்பெண் குறைவாகப் பெறுவதால், அவனின் தாய் சந்திக்கு சிக்கல்களே கதை.

The GOAT (Tamil) Netflix - Oct 3

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த படம் `The GOAT’. காந்தி Special Anti-Terrorist Squad முன்னாள் ஏஜென்ட். கடந்த காலத்தில் அந்த குழு செய்த ஒரு விஷயத்தின் விளைவு, நிகழ்காலத்தில் துரத்துகிறது. அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கதை.

Bhale Unnade (Telugu) etv WIN - Oct 3

Bhale Unnade

வர்தன் சிவசாய் இயக்கிய படம் `Bhale Unnade’. ராதா - கிருஷ்ணா காதலில் வரும் பிரச்சனையும், கிருஷ்ணாவின் பெற்றோரின் எதிர்ப்பும் எப்படி சரியாகிறது என்பதே கதை.

Kalinga (Telugu) Aha - Oct 4

Kalinga

த்ருவா இயக்கிய படம் `Kalinga'. ஊருக்குள் நிகழும் பயங்கரமான பல விஷயங்களை கவனிக்கும் ஹீரோ, அதன் பின் உள்ள மர்மத்தை புரிந்து கொண்டு, அதனை சரி செய்தாரா என்பதே கதை.

Anandapuram Diaries (Malayalam) manorama MAX - Oct 4

Anandapuram Diaries

ஜெய ஜோஷ் இயக்கிய படம் `Anandapuram Diaries’. பல தடைகள் கடந்து தனது படிப்பை முடிக்க வருகிறார் நந்தினி. அங்கு அவர் சந்திக்கும் நட்பும், சிக்கல்களுமே கதை.

Theatre

Neela Nira Sooriyan (Tamil) - Oct 4

Neela Nira Sooriyan

சம்யுக்தா இயக்கியுள்ள படம் ` நீல நிறச் சூரியன்’. அரவிந்த் என்ற ஆசிரியர், தன்னைப் பெண்ணாக உணர்வதால், பெண்ணாகவே மாறி வாழ விரும்புகிறார். அந்த முடிவால் என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறார் என்பதே கதை.

SWAG (Telugu) - Oct 4

SWAG

ஹஷித் கோலி இயக்கத்தில் ஸ்ரீவிஷ்ணு நடித்துள்ள படம் `SWAG’. வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் காமெடி கதை.

Thekku Vadakku (Malayalam) - Oct 4

பிரேம் சங்கர் இயக்கத்தில் விநாயகன், சுராஜ் வெஞ்சாராமூடு நடித்துள்ள படம் `Thekku Vadakku'. ரிட்டயரான மின் பொறியாளருக்கும், ரைஸ் மில் ஓனருக்கும் இடையே எப்போதும் போட்டி இருக்கும். அவர்களின் பகைமை அவர்களை எங்கு கொண்டு செல்கிறது என்பதே கதை.

Joker: Folie a Deux (English) - Oct 4

Joker Folie a Deux

Todd Phillips இயக்கத்தில் Joaquin Phoenix நடித்து 2019ல் வெளியான Joker படத்தின் சீக்குவலாக உருவாகியிருக்கிறது `Joker: Folie a Deux'. முதல் பாகத்து சம்பவங்களுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து கதை நடக்கிறது. ஆர்த்தர் செய்த கொலைகளுக்காக சிறையிலிருக்கிறார். கொலைகள் செய்யக் காரணம் ஆர்த்தருக்குள் இருந்த ஜோக்கர் தான். ஆர்த்தர் ஸ்ப்லிட் பர்சனாலிட்டி என்பதால் அவர் நிரபராதி என நடக்கிறது வழக்கு. இதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை.