இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் புதிய தலைமுறை
ஓடிடி திரைப் பார்வை

கொட்டுக்காளி | மெய்யழகன் | டிமாண்டி காலனி 2 | ஹிட்லர் | இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!

Johnson

கொட்டுக்காளி, சூர்யாவின் சனிக்கிழமை, டிமாண்டி காலனி 2, மெய்யழகன், பேட்ட ராப், தேவாரா 1, ஹிட்லர் என இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...

Series

9-1-1: Lone Star S5 (English) Hotstar - Sep 24

9-1-1: Lone Star S5

தீயணைப்பு வீரர்களை மையமாக வைத்து உருவான சீரிஸ் `9-1-1: Lone Star'. இப்போது இதன் ஐந்தாவது சீசன் வெளியாகவிருக்கிறது.

Grotesquerie (English) Hotstar - Sep 26

Grotesquerie

ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Grotesquerie'. மர்மமான முறையில் நிகழும் கொலைகள், அதற்குப் பின்னிருக்கும் காரணமுமே கதை.

Nobody Wants This (English) Netflix - Sep 26

Nobody Wants This

Adam Brody - Kristen Bell நடித்துள்ள சீரிஸ் `Nobody Wants This'. நோவா - ஜோன்னே இடையேயான காதலும், மோதலுமே கதை.

Taaza Khabar S2 (Hindi) Hotstar - Sep 27

Taaza Khabar S2

ஃபேண்டஸி ஜானரில் உருவான சீரிஸ் `Taaza Khabar'. இதன் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு கிடைக்கும் சக்திகளும், அடுத்த சம்பவங்களுமே கதை.

OTT

Killer Heat (English) Prime - Sep 26

Killer Heat

Philippe Lacôte இயக்கியுள்ள படம் `Killer Heat'. The Jealousy Man சிறுகதையை தழுவி உருவாகியிருக்கிறது. தீவு ஒன்றில் நடக்கும் குற்றமும், அதன் காரணமுமே கதை.

Love Sitara (Hindi) Zee5 - Sep 27

Love Sitara

வந்தனா இயக்கத்தில் ஷோபிதா துலிபாலா நடித்துள்ள படம் `Love Sitara'. திருமணம், காதல் மீது நம்பிக்கையற்ற சித்தாரா, அர்ஜூனை சந்தித்த பின் காதல் கொள்கிறாள். அதன் பின் நடக்கும் சிக்கல்களே படம்.

Rez Ball (English) Netflix - Sep 27

Rez Ball

Sydney Freeland இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `Rez Ball'. அமெரிக்க கூடைபந்து குழுவான The Chuska Warriors, வெற்றி பெற போராடுவதே கதை.

Post Theatrical Digital Streaming

Vaazha (Malayalam) Hotstar - Sep 23

Vaazha

ஆனந்த் இயக்கிய படம் `Vaazha’. உறுப்படாதவர்கள் என முத்திரை குத்தப்பட்ட இளைஞர்கள், வாழ்வில் என்ன செய்கிறார்கள் என்பதே கதை.

Inside Out 2 (English) Hotstar - Sep 25

Inside Out 2

2015ல் வெளியான Inside Out படத்தின் சீக்குவல் `Inside Out 2’. முதல் பாகத்தில் சிறுமி ரெய்லியின் உணர்வுகளை பேசியது படம். இப்போது அவள் தனது பதின் பருவத்தில் இருக்கிறாள். அவளுக்குள் எற்படும் புதிய உணர்வுகளைப் பற்றி கூறுகிறது படம்.

Saripodhaa Sanivaaram (Telugu) Netflix - Sep 26

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி - எஸ்.ஜே.சூர்யா நடித்த படம் `Saripodhaa Sanivaaram'. அநீதிகளை கண்டு பொங்கும் சூர்யா, சனிக்கிழமைகளில் அதைத் தட்டிக் கேட்க புறப்படுவார். அப்படி அவர் தட்டிக் கேட்கும் போது, கொடூரமான போலீஸ் அதிகாரி தயாவை எதிர்க்க நேர்கிறது. அதன் பின் என்ன என்பதே கதை.

Kottukkaali (Tamil) Prime - Sep 27

Kottukkaali

வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, ஆன்னா பென் நடித்த படம் `கொட்டுக்காளி’.  ஒரு குடும்பத்தின் பயணத்தினூடாக, குடும்பம், சமூகம், ஆணாதிக்கம், மூட நம்பிக்கை என பல விஷயங்கள் வெளிப்படுவதே படம்.

Demonte Colony 2 (Tamil) Zee5 - Sep 27

Demonte Colony 2

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் நடித்த படம் `டிமாண்டி காலனி 2’. மீண்டும் ஆத்மாவை ஒருவர் கிளப்பிவிட, பின்பு என்ன ஆகிறது என்ற த்ரில்லரே கதை.

Prathinidi 2 (Telugu) Aha - Sep 27

Prathinidi 2

மூர்த்தி இயக்கத்தில் நர ரோஹித் நடித்த படம் `Prathinidi 2'. 2014ல் நர ரோஹித் நடித்த `Prathinidi’ படத்தின் சீக்குவலே இது. அரசியல் ஊழல் ஒன்றை வெளிச்சத்துக்கு கொண்டு வரப் போராடும் நபர் பற்றிய கதை.

Bharathanatyam (Malayalam) manorama MAX - Sep 27

Bharathanatyam

கிருஷ்ணதாஸ் இயக்கிய படம் `Bharathanatyam’. மருத்துவமனையில் தனது தந்தையை சேர்க்கும் இளைஞன், குடும்ப ரகசியம் ஒன்றை பாதுகாக்கப் போராடுவதே கதை.

Stree 2 (Hindi) Prime - Sep 27

Stree 2

2018ல் வெளியான Stree படத்தின் சீக்குவல் உருவாகியிருக்கிறது. மீண்டும் செந்தேரி அமானுஷ்ய தாக்குதலுக்கு உள்ளாகிறது. பெண்கள் கடத்தப்படுகிறார்கள். இவை எப்படி சரியாகிறது என்பதை காமெடி கலந்து சொல்கிறது படம். 

Theatre

Meiyazhagan (Tamil) - Sep 27

மெய்யழகன்

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அர்விந்த் சுவாமி நடித்துள்ள படம் `மெய்யழகன்’. திருமணம் ஒன்றிற்கு வரும் நபர், அங்கு அவர் சந்திக்கும் ஒருவரால் என்னென்ன விஷயங்களை எதிர்கொள்கிறார் என்பதே கதை.

Hitler (Tamil) - Sep 27

Hitler

தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் `ஹிட்லர்’. கொலைகாரன் ஒருவனைப் பிடிக்கும் சம்பவங்களே கதை.

Petta Rap (Tamil) - Sep 27

பிரபுதேவா நடித்துள்ள படம் `பேட்டா ராப்’. சினிமாவில் நடிகனாகும் ஆசைப்படும் இளைஞன் பல அவமானங்களை சந்திக்கிறான். அதன் விளைவாக தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைக்கிறான். சாகும் முன்பு சொகுசான வாழ்வை வாழ நினைக்கும் அவனின் பயணமே கதை.

Sattam En Kayil (Tamil) - Sep 27

Sattam En Kayil

சாச்சி இயக்கத்தில் சதீஷ் நடித்துள்ள படம் `சட்டம் என் கையில்’. நகரில் நடக்கும் கொலைகள், சந்தேகத்தின் பேரில் கைதாகும் ஒரு இளைஞன். அதன் பின் என்ன நடந்தது என்பதே கதை.

Devara - Part 1 (Telugu) - Sep 27

கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், சைஃப் அலிகான் நடித்துள்ள படம் `Devara - Part 1'. கடல்சார்ந்த நிலத்தில் மக்களுக்கு பயத்தைக் கொடுக்கும் ஒருவனின் கதை.