இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் புதிய தலைமுறை
ஓடிடி திரைப் பார்வை

1000 Babies | சார் | ஆலன் | Rocket Driver | இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!

1000 Babies, சார், ஆலன், Rocket Driver என இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...

Johnson

1000 Babies, சார், ஆலன், Rocket Driver என இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...

Series

Reeta Sanyal (Hindi) Hotstar - Oct 14

Reeta Sanyal

அபிருப் கோஷ் இயக்கத்தில் அடா ஷர்மா நடித்துள்ள சீரிஸ் `Reeta Sanyal’. வக்கீல் ரீத்தா, அவளது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளே கதை.

Shrinking: S2 (English) Apple TV+ - Oct 16

Shrinking S2

Harrison Ford நடித்துள்ள சீரிஸ் `Shrinking'. இதன் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. தனது மனைவியின் மறைவுக்குப் பிறகு ஜிம்மி தன் வாழ்க்கையை எப்படி கையாள்கிறார் என்பதே கதை.

The Office Australia (English) Prime - Oct 17

The Office Australia

The Office சீரிஸின் ஆஸ்திரேலிய ரீமேக் `The Office Australia’. ஒரு அலுவலகத்திற்குள் நடக்கும் மாக்குமெண்ட்ரி ஸ்டைல் கதை.

Paris Has Fallen (English) Lionsgate Play - Oct 17

Paris Has Fallen

Howard Overman இயக்கியுள்ள சீரிஸ் `Paris Has Fallen'. பாரிஸுக்கு வரும் ஆபத்தை தடுக்கப் போராடும் இரண்டு ஏஜெண்ட்களின் கதை.

Snakes and Ladders (Tamil) Prime - Oct 18

Snakes and Ladders

அஷோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா இயக்கியுள்ள சீரிஸ் `Snakes and Ladders'. நான்கு சிறுவர்கள் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள அதிலிருந்து தப்பிக்க செய்யும் முயற்சிகளே கதை.

1000 Babies (Malayalam) Hotstar - Oct 18

1000 Babies

நஜீம் கோயா இயக்கத்தில் ரஹ்மான், நீனா குப்தா நடித்துள்ள சீரிஸ் `1000 Babies'. குற்றவாளி ஒருவரை தேடும் காவல்துறையின் செயல்களே கதை.

Soul Stories (Malayalam) manorama MAX- Oct 18

Soul Stories

சனில் இயக்கியுள்ள சீரிஸ் `Soul Stories'. சமூகத்தில் பெண்களின் நிலையைப் பற்றி பேசுகிறது. 

The Pradeeps of Pittsburgh (English) Prime - Oct 18

The Pradeeps of Pittsburgh

Michael Showalter இயக்கியுள்ள சீரிஸ் `The Pradeeps of Pittsburgh'. பிட்ஸ்பெர்க் வரும் ஒரு இந்தியக் குடும்பம் சந்திக்கும் விஷயங்களே கதை.

The Devil’s Hour: S2 (English) Prime - Oct 18

The Devil’s Hour: S2

Johnny Allan, Isabelle Sieb, Shaun James Grant இயக்கத்தில் உருவாகியுள்ளது `The Devil’s Hour’ இரண்டாவது சீசன். லூசி தினமும் அதிகாலை 3.33 மணிக்கு எழுந்து கொள்வாள். அவளது வாழ்வில் நடக்கும் எந்த விஷயமும் அவளுக்குப் புரிவதில்லை. அந்த மர்மம் என்ன என்பதை அவள் அறிய செய்யும் முயற்சிகளே கதை.

Rivals (English) Hotstar - Oct 18

Rivals

Elliot Hegarty இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் `Rivals’. Rupert Campbell-Black - Lord Tony Baddingham இடையேயான பகைமையே கதை.

OTT

Brothers (English) Prime - Oct 17

Brothers

Max Barbakow இயக்கியுள்ள படம் `Brothers’. மாக் தனது மனைவியுடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனது சகோதரன் ஒரு உதவி எனக் கேட்டு வந்த பின் என்ன ஆகிறது என்பதே கதை.

Chennaiyil Vaanam Megamoottathudan Kanappadum (Tamil) Aha - Oct 18

Chennaiyil Vaanam Megamoottathudan Kanappadum

ரமேஷ் கோவிந்தராஜன் இயக்கியுள்ள படம் `சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்’. ஓர் இரவில் நடக்கும் ஹைப்பர்லிங் டாமாவே கதை.

Woman of the Hour (English) Netflix - Oct 18

Woman of the Hour

Anna Kendrick இயக்கி நடித்துள்ள படம் `Woman of the Hour'. வளர்ந்து வரும் நடிகையும் - ஒரு சீரியல் கில்லரும் ஒரு விளையாட்டில் கலந்து கொள்வதே கதை.

Post Theatrical Digital Streaming

Level Cross (Malayalam) Prime - Oct 13

Level Cross

அர்ஃபாஸ் இயக்கியுள்ள படம் `Level Cross'. ரெயில்வே கே கீப்பர் ரகு, ரயிலில் இருந்து தவறி விழுந்த சைத்தாலி என்ற பெணை சந்திக்கிறான். அதன் பின் நடப்பவையே கதை.

Kondal (Malayalam) Netflix - Oct 13

Kondal

அஜித் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடித்த படம் `Kondal’. ஒரு சண்டையால் இமானுவேல் உடனடியாக கிளம்ப வேண்டிய சூழல் உருவாகிறது. ஆண்டனியில் படகில் ஏறி மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குள் செல்பவர் அதன் பின் என்ன செய்கிறார் என்பதே கதை.

Alien Romulus (English) Apple TV+ - Oct 15

Alien Romulus

Fede Alvarez இயக்கிய படம் `Alien: Romulus'. 1979ல் வெளியான Alien மற்றும் 1986ல் வெளியான Aliens படங்களுக்கு இடைப்பட்ட கதைதான் இது. இளம் விண்வெளி வீரர்கள், ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள். அங்கு அவர்கள் ஏலியனால் எதிர்கொள்ளும் பிரச்சனையே கதை.

Longlegs (English) Prime - Oct 16

Longlegs

Oz Perkins இயக்கிய படம் `Longlegs'. சீரியல் கில்லர் ஒருவனைப் பிடிக்க துரத்தும் FBI ஏஜென்டின் கதை.

Kali (Telugu) etv WIN - Oct 17

Kali

சிவா இயக்கிய படம் `Kali'. வாழ்வு மரணம் குறித்த கதைக்களம் கொண்ட படம்.

Miller’s Girl (English) Prime - Oct 17

Miller’s Girl

Jade Halley Bartlett இயக்கத்தில் Martin Freeman, Jenna Ortega நடித்த படம் `Miller’s Girl'. ஒரு கட்டுரைப் போட்டியில் ஆசிரியருக்கும், அவரது மாணவிக்கும் இடையே நிகழும் விஷயங்களே கதை.

Bullet Diaries (Malayalam) Saina Play - Oct 18

Bullet Diaries

சந்தோஷ் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடித்த படம் `Bullet Diaries'. புல்லட் பைக்கின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு இளைஞன் பற்றிய கதை.

Laughing Buddha (Kannada) Prime - Oct 18

Laughing Buddha

பரத்ராஜ் இயக்கிய படம் `Laughing Buddha'. ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சந்திக்கும் சிக்கலும், அவரது வாழ்க்கையுமே கதை.

Theatre

Bougainvillea (Malayalam) - Oct 17

Bougainvillea

அமல் நீரத் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், ஃபஹத் பாசில், ஜோதிர்மயி நடித்துள்ள படம் `Bougainvillea’. ஒரு சுற்றுலா பயணி காணாமல் போன விஷயத்தில் ஒரு குடும்பம் சம்பந்தப்பட, அதைப் பற்றிய விசாரணைகளே கதை.

Sir (Tamil) - Oct 18

Sir

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள படம் `சார்’. கல்வியை கொடுப்பதில் நடக்கும் சிக்கல்களே கதைக்களம்.

Aalan (Tamil) - Oct 18

Aalan

சிவா இயக்கத்தில் வெற்றி, அனு சித்தாரா நடித்துள்ள படம் `ஆலன்’. எழுத்தாளர் ஒருவர் தனது முன் ஜென்மத்துடைய தொடர்புகளைப் பற்றி ஆராய்வதே கதை.

Rocket Driver (Tamil) - Oct 18

Rocket Driver

ஸ்ரீராம் ஆனத்ஷங்கர் இயக்கியுள்ள படம் `ராக்கெட் டிரைவர்’. தான் ஏ பி ஜே அப்துல்கலாம் எனச் சொல்லி உதவி கேட்டு வரும் சிறுவனும், அவனை சமாளிக்க திணறும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பெண் ட்ராஃபிக் கான்ஸ்டபிளும் - இதுவே கதைக் களம்.

Aaryamala (Tamil) - Oct 18

Aaryamala

ஜேம்ஸ் இயக்கியுள்ள படம் `ஆர்யமாலா’. மலர் என்ற பெண்ணின் வாழ்க்கையில் நடப்பவையே கதைக்களம்.

The Wild Robot (English) - Oct 18

The Wild Robot.

Lilo & Stitch, How to Train Your Dragon, The Croods போன்ற படங்களை இயக்கிய Chris Sanders தற்போது இயக்கியுள்ள அனிமேஷன் படம் `The Wild Robot’. ராஸ் என்ற இன்டலிஜண்ட் ரோபோவை தீவு ஒன்றில் எறிகிறார்கள். அங்கு ராஸ் வாழ்வதற்காக என்னென்ன செய்கிறது என்பதே கதை.

Goodrich (English) - Oct 18

Goodrich

Hallie Meyers-Shyer இயக்கத்தில் Michael Keaton, Mila Kunis நடித்துள்ள படம் `Goodrich’. தனது இரண்டாவது மனைவி ரீஹேப் சென்ற பின் தன் இரட்டைக் குழந்தைகளை சமாளிக்க, மூத்த மகளின் உதவி வேண்டி நிற்கிறார் குட் ரிச். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

Smile 2 (English) - Oct 18

Smile 2

Parker Finn இயக்கத்தில் 2022ல் வெளியான Smile படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. பிரபல பாப் பாடகி ஸ்கை ரெய்லி, தனது உலக சுற்றுப் பயணத்திற்கு முன் அமானுஷ்யாமான விஷயங்களை உணர்கிறாள். அதைத் தொடர்ந்து நடப்பவையே கதை.