STAR | MANJUMMEL BOYS | AAVESHAM STAR | MANJUMMEL BOYS | AAVESHAM
ஓடிடி திரைப் பார்வை

STAR | MANJUMMEL BOYS | AAVESHAM... இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட் இதோ..!

Johnson

Monsters at Work S2 (English) Hotstar - May 5

Monsters at Work S2

Pixarன் Monsters, Inc ஃப்ரான்சாஸில் ஒன்று `Monsters at Work' அனிமேஷன் சீரிஸ். டெய்லர் மான்ஸ்டர் கம்பெனியின் வேலை செய்து கொண்டிருக்கும் போதே, அதன் எதிராளியான ஃபியர் கம்பெனியிலிருந்து ஆஃபர் வருகிறது. அதன் பின் நடப்பவையே இப்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது சீசனின் கதை.

Dark Matter (English) Apple TV+ - May 8

Dark Matter

Blake Crouch எழுதி 2016ல் வெளியான Dark Matter நாவல் அதே பெயரில் சீரிஸாக உருவாகியிருக்கிறது. ஒரு மனிதனை கடத்தி, அவனது வாழ்க்கையின் வேறொரு வெர்ஷனுக்குள் இறக்கிவிடுகிறார்கள். இந்த பயணத்தில் அவனுக்கு என்ன சிக்கல் வருகிறது, அதை எப்படி சரி செய்தான் என்பதே கதை.

Under the Bridge (English) Hotstar - May 8

Under the Bridge

Lily Gladstone முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சீரிஸ் `Under the Bridge'. பதினான்கு வயது சிறுமி தொலைந்து போகிறாள். அதன் பின் நடப்பவையே கதை.

Bodkin (English) Netflix - May 9

Bodkin

பாட்காஸ்ட் செய்யும் குழு ஒன்று, காணாமல் போன மூவரைப் பற்றி விசாரிக்கத் துவங்குகிறது. அவர்கள் கண்டுபிடிக்கும் உண்மை கற்பனைக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கிறது. அந்த உண்மை என்ன என்பதே கதை.

Undekhi S3 (Hindi) SonyLIV - May 10

Undekhi S3

Ashish R Shukla இயக்கி 2020ல் வெளியான சீரிஸ் `Undekhi’. தற்போது அதன் மூன்றாவது சீசன் வெளியாகவிருக்கிறது. பணமும், அதிகாரமும் கையில் வைத்திருப்பவர்கள், எளியவர்களை எப்படி எல்லாம் நசுக்குகிறார்கள் என்பதை சொல்லும் சீரிஸ்.

Mother of the Bride (English) Netflix - May 9

Mother of the Bride

Mark Waters இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Mother of the Bride’. மகள் திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளை யார் எனத் தெரிந்த பின்பு, அம்மா செய்யும் சூழ்ச்சிகளே கதை.

Manjummel Boys (Malayalam) Hotstar - May 5

Manjummel Boys

Jan. E. Man படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சிதம்பரம் தற்போது இயக்கிய படம் `Manjummel Boys'. ஒரு நண்பர்கள் குழு குணா குகையில் சிக்கிக் கொண்ட நண்பனை மீட்க செல்கிறார்கள். ஆனால் அங்கு நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள், அவர்களை ஆபத்தில் சிக்க வைக்கிறது. பிறகு என்ன ஆனது என்ற சர்வைவல் த்ரில்லரே படம்.

The Boys (Tamil) Aha - May 7

The Boys

இருட்டு அறையில் படத்தின் இரு பாகங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார், மீண்டும் அடல்ட் ஸோனில் இறங்கிய படம் `The Boys. ஒரே வீட்டில் வசிக்கும் சில நண்பர்களின் வாழ்வில் நடக்கும் விஷயங்கள்தான் கதை.

All of Us Strangers (English) Hotstar - May 8

All of Us Strangers

Andrew Haigh இயக்கிய படம் `All of Us Strangers'. இழந்த தனது குடும்பத்தினரின் நினைவில் வாடும் ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் நட்பு, எப்படி அவரது காயங்களை ஆற்றுகிறது என்பதே கதை.

Geethanjali Malli Vachindi (Telugu) Aha - May 9

Geethanjali Malli Vachindi

அஞ்சலி நடிப்பில் வெளியான 50வது படம் `Geethanjali Malli Vachindi'. பாழடைந்த பங்களா ஒன்றில் ஹாரர் படத்தின் படப்பிடிப்பு நடத்த செல்கிறது ஒரு குழு. அங்கு நிஜமாகவே பேய் இருப்பது தெரிந்த பின் என்ன ஆகிறது என்பதே கதை.

Chitram Choodara (Telugu) Etv Win - May 9

Chitram Choodara

ஹர்ஷவர்தன் இயக்கத்தில் உருவான படம் `Chitram Choodara'. லொக்கேஷன் பார்க்க செல்லும் இடத்தில் சில கலைஞர்களை சந்திக்கிறார் தயாரிப்பு நிறுவன மேனேஜர். அதன் பின் என்ன நிகழ்கிறது என்பதே கதை.

Aavesham (Malayalam) Prime - May 9

Aavesham

`Romancham’ படம் மூலம் கவனம் ஈர்த்த Jithu Madhavan இயக்கி ஃபகத் பாசில் நடித்திருக்கும் படம் `Aavesham’. காலேஜ் ரேகிங் தொல்லையை சமாளிக்க பெரிய கேங்க்ஸ்டரை தேடுகிறார்கள் நண்பர்கள் மூவர். அதன் பின் நடப்பவையே கதை.

Romeo (Tamil) Prime & Aha - May 10

Romeo

விநாயக் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி நடித்த படம் `ரோமியோ’. மனைவியை கவர கணவன் எடுக்கும் முயற்சிகளை காமெடியாக சொல்லும் படம்.

8 A.M. Metro (Hindi) Zee5 - May 10

8 A.M. Metro

ராஜ் ரச்சகொண்டா இயக்கத்தில் குல்ஷன் தேவய்யா, ஷயாமி கெர் நடித்த படம் `8 A.M. Metro'. முன்பின் தெரியாத ஆணும் பெண்ணும் ரயிலில் சந்தித்துக் கொள்ள, மெல்ல மெல்ல ஒரு நட்பு உருவாகிறது. அதன் பின் நடப்பனையே கதை.

The Marsh King’s Daughter (English) Lionsgate Play - May 10

The Marsh King’s Daughter

Limitless, Divergent படங்களை இயக்கிய Neil Burger இயக்கித்தில் உருவான படம் ` The Marsh Kings Daughter'. ஒரு பெண் தனது தாயைக் கடத்தியவனை பழிவாங்க எடுக்கும் முயற்சிகளே படத்தின் கதை.

Star (Tamil) - May 10

Star

`ப்யார் ப்ரேமா காதல்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இளன், இப்போது கவின் நடிப்பில் இயக்கியுள்ள படம் `ஸ்டார்’. நடிகனாக ஆசைப்படும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகளே கதை.

Rasavathi (Tamil) - May 10

Rasavathi

`மௌனகுரு;, `மகாமுனி’படங்களைத் தொடர்ந்து சாந்தகுமார் இயக்கியிருக்கும் படம் `ரசவாதி’. அர்ஜூன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான படமாக உருவாகியிருக்கிறது.

Uyir Thamizhukku (Tamil) - May 10

Uyir Thamizhukku

ஆதம் பாவா இயக்கத்தில் அமீர் நடித்துள்ள படம் `உயிர் தமிழுக்கு’. ஒரு பொலிட்டிகல் த்ரில்லராக உருவாகியிருக்கிறது படம்.

Krishnamma (Telugu) - May 10

Krishnamma

சத்யதேவ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `கிருஷ்ணம்மா’. ஆதரவற்ற மூவர் நண்பர்களாகி, வளர்ந்து எப்படி ஒரு குடும்பமாகிறார்கள் என்பதே கதை.

Marivillin Gopurangal (Malayalam) - May 10

Marivillin Gopurangal

அருண் போஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Marivillin Gopurangal'. திருமண வாழ்வுக்கு தயாராகும் முன் திருமணம் செய்த ஒரு தம்பதி, அந்த தம்பதியின் வாழ்க்கையில் வரும் இன்னொரு ஜோடி. இதின் என்னென்ன புரிதல்கள் ஏற்படுகிறது என்பதே கதை.

Srikanth (Hindi) - May 10

Srikanth

`Saand Ki Aankh' படம், `Scam 2003' சீரிஸ் ஆகியவற்றை இயக்கிய Tushar Hiranandani இயக்கி, ராஜ்குமார் ராவ், ஜோதிகா நடித்துள்ள படம் `Srikanth’. பார்வை சவால் கொண்ட ஸ்ரீகாந்த் பொல்லா, எப்படி பெரிய தொழிலதிபர் ஆனார் என்ற நிஜ வாழ்க்கை சம்பவத்தை படமாக மாற்றியிருக்கிறார்கள்.

Kingdom of the Planet of the Apes (English) - May 10

Kingdom of the Planet of the Apes

The Maze Runner படம் இயக்கிய Wes Ball இயக்கியுள்ள படம் `Kingdom of the Planet of the Apes'. 2017ல் வெளியான War for the Planet of the Apes படத்தின் ஸ்டாண்ட் அலோன் சீக்குவலாக உருவாகியிருக்கிறது. அந்தப் படத்து சம்பவங்களுக்கு 300 வருடங்களுக்குப் பின் இக்கதை துவங்குகிறது. சீசர் தன் குரங்கு இனத்தை வழி நடத்துகிறது. இம்முறை என்ன சவால், அது எப்படி சரியானது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.