அனிருத்தா ராஜ்டேர்கர் & புவனா இயக்கத்தில் உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் `Raisinghani vs Raisinghani'. ராய்சிங்ஹானி குரும்பத்தினர் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. அதன் பின் நடக்கும் பரபர விவாதங்கள் அடங்கிய கோர்ட் ரூம் ட்ராமா தான் களம். திங்கள் முதல் புதன் வரை 8 மணிக்கு ஒவ்வொரு எப்பிசோடாக வெளியாகவிருக்கிறது தொடர்.
Ken Olin இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Tracker’. Colter Shaw தனது பழைய RVயில் நாட்டில் பல இடங்களுக்கு பயணித்து, போலீஸ் மற்றும் மக்களின் தீர்க்க முடியாத கேஸ்களை தீர்த்து வைக்கிறான். ஆனால் ஒரு கேஸ் எதிர்பாராத விதமாக அவன் வாழ்க்கையை திருப்பிப் போட்டு தாக்குகிறது. அது என்ன? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதே கதை.
சிதம்பரம் மணிவண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Vera Maari Love Story'. ஏற்கெனவே ஆஹாவில் ஓடிக் கொண்டிருக்கும் `Vera Maari Office' சீரிஸின் ஸ்பின் ஆஃபாக இதை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆறு நிஜ ஜோடிகளின் காதலை சொல்லும் ஆவண தொடராக உருவாகியிருக்கிறது `Love Storiyaan'. காதலர் தினத்தை குறிவைத்து, காதலின் பல பக்கங்களைப் பேசும் தொடரை வெளியிடுகிறார்கள்.
Anthony Philipson இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆவணப்படம் `Einstein and the Bomb'. அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீனின் வாழ்க்கை, அவரின் பணிகள் உலகை எப்படி மாற்றியது போன்றவற்றை, ஐன்ஸ்டீனின் வீடியோக்கள் மூலமும், எழுத்தின் மூலமும் விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.
Shawn Seet இயக்கியிருக்கும் படம் `Five Blind Dates'. எதிர்காலத்தை கணித்து சொல்லும் பெண் ஒருவர், Lia Lingவிடம் அவளுடைய எதிர்காலத்தை சொல்கிறார். அடுத்து நீ செல்லப் போகும் ஐந்து டேட்களில், ஒருவர் தான் உன் சோல்மேட் என சொல்ல, அடுத்து நடக்கும் கலாட்டாக்கள் தான் கதை.
Trish Sie இயக்கியிருக்கும் படம் `Players’. கொரிய படமான `Cyrano Agency' படத்தில் இன்ஸ்பையர் ஆகி தமிழில் `இது என்ன மாயம்’ படத்தை இயக்கினார் ஏ.எல்.விஜய். இரு படங்களிலும், காதலை சேர்த்து வைக்க ஹீரோ தன் டீமுடன் இணைந்து ஒரு நாடகத்தை செயல்படுத்துவார். இங்கு அந்த கதாப்பாத்திரத்தை பெண்ணாக்கி இருக்கிறார்கள். Mack என்ற அந்த பெண், தன்னுடைய டார்கெட் ஒருவரின் மீது காதல் வயப்பட, அதன் பின் என்னாகிறது என்பதே கதை.
அபிமன்யூ இயக்கத்தில் 2022ல் வெளியான படம் `Bhamakalapam’. இந்தப் படத்தின் சீக்குவல் இப்போது வருகிறது. அனுபமா மோகன் என்ற இல்லத்தரசி, இந்த முறை என்ன சிக்கலில் மாட்டுகிறார், அதிலிருந்து எப்படி தப்புகிறார் என்பதை காமெடி கலந்து சொல்ல இருக்கிறார்கள்.
Lester Hsi இயக்கி 2020ல் வெளியான `The Bridge Curse’ படத்தின் சீக்குவல் தான் `The Bridge Curse: Ritual’. அமானுஷ்ய சக்திகள் உள்ளதாக நம்பப்படும் பள்ளி ஒன்றில், சிலர் ஒரு விளையாட்டு விளையாட செல்வதால் நடக்கும் வினைகளே படம்.
Dave Meyers இயக்கியிருக்கும் படம் `This Is Me...Now: A Love Story’ பாடகியும், நடிகையுமான ஜெனிஃபர் லோபஸின் சமீபத்திய ஆல்பத்தின் பெயர் தான் `This Is Me...Now'. அந்த பெயரில் காதலை இணைத்து, ஜெ லோவுடைய காதல் பயணத்தை படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
அசோக் செல்வன் நடிப்பில் வெளியான படம் `சபா நாயகன்’. ஒரு இளைஞனின் வாழ்வில் வெவ்வேறு காலகட்டங்களில் கடந்து வந்த காதல்கள் தான் படத்தின் கதை.
பத்மகுமார் இயக்கத்தில் மீரா ஜாஸ்மின், நரேன் நடித்து வெளியான படம் `Queen Elizabeth'. எலிசபெத் ஒரு சிங்கிள், மற்றவர்கள் விஷயங்களில் தலையிட விரும்பாத சுபாவம் கொண்டவர். மற்றவர்களுக்கு எலிச்பெத் ஒரு சுவாரஸ்யமற்ற, பேசுவதற்கு கடுப்படிக்கும் ஆளாக இருந்தாலும், அலெக்ஸ்க்கு மட்டும் அவர் ஸ்பெஷல். எலிசபெத் - அலெக்ஸ் காதல் கதை என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
Rajkumar Hirani இயக்கத்தில் Shah Rukh Khan, Taapsee Pannu, Vicky Kaushal, Boman Irani நடித்த படம் `Dunki’. நான்கு நண்பர்கள் பஞ்சாபில் இருந்து இங்கிலாந்து செல்ல விரும்புகிறார்கள். டிக்கெட்டுக்கு காசோ, விசாவோ கூட இல்லாத அவர்கள் வாழ்வில் ஒரு இராணுவ வீரர் வருகிறார். அவர்களின் கனவை நிறைவேற்றித் தருவதாக வாக்களிக்கிறார். இதன் பின் நடப்பவையே கதை.
அபிலாஷ் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் நடித்த படம் `ரூட் நம்பர் 17’. பாதுகாப்பு காரணங்களுக்காக 30 வருடங்களாக, தடைசெய்யப்பட்டிருக்கும் வனப்பகுதிக்குள் சிலர் நுழைந்துவிட, அதன் பின் நடப்பவையே கதை.
Sudipto Sen மற்றும் Vipul Amrutlal Shah இயக்கத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான படம் `The Kerala Story'. மதமாற்றம், ISIS, எனப் பல பிரச்சனைக்குறிய விஷயங்களை பேசுகிறது.
விஜய் பின்னி இயக்கத்தில் நாகார்ஜூனா, ஆஷிகா, அல்லரி நரேஷ், மிர்ணா நடித்து வெளியான படம் `Naa Saami Ranga'. மலையாளத்தில் ஜோஷி இயக்கி 2019ல் வெளியாகி ஹிட்டான Porinju Mariam Jose படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இது. 1980 -90களில் திரிஷூரில் நடந்த சம்பவத்தை மையமாக கொண்ட கதை. இரு சகோதரர்களின் வாழ்க்கை ஒரு மோசமான நபரால் நொறுக்கப்படுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை
இந்த வாரம் புது ரிலீஸை விட அதிகமாக ரீ-ரிலீஸ் படங்கள் வருகிறது. காதலர் தினத்தை குறிவைத்து பிப்ரவரி 13 முதல் 15 வரை லிமிட்டட் ரிலீஸாக படங்கள் வெளியாகின்றன. தமிழில் 96, தெலுங்கில் Seetha Ramam, Baby, Oye; இந்தியில் Yeh Jawaani Hai Deewani, Jab We Met, Dilwale Dulhania Le Jayenge, Sonu Ke Titu Ki Sweety, Pyaar Ka Punchnama, Pyaar Ka Punchnama 2; Veer-Zaara; ஆங்கிலத்தில் Titanic போன்ற படங்கள் வெளியாகின்றன. மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், மின்னலே; மலையாளத்தில் Premam, Om Shanti Oshana போன்ற படங்கள் ஏற்கனவே மறுவெளியீடாக தியேட்டரில் களம் இறங்குகியிருக்கின்றன.
`பூதக்காலம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்திருக்கும் படம் `ப்ரமயுகம்’. தேவன் என்ற நாட்டுப்புறப் பாடகன் சந்திக்கும் அமானுஷ்யமான விஷயமும், அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளுமே கதை. படத்தை கருப்பு வெள்ளையில் மட்டும் வெளியிடுகிறார்கள் என்பது இன்னொரு சுவாரஸ்ய தகவல்.
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி நடித்திருக்கும் படம் `சைரன்’. ஆம்புலன்ஸ் ட்ரைவராக இருந்த நாயகன், ஒரு கொலை பழியின் காரணமாக சிறைக்கு செல்கிறார். அவர் பரோலில் வெளி வரும் போது நடக்கும் சம்பவங்கள், அவர் கடந்த காலத்தையும் வெளிக் கொண்டு வருகிறது. அவை என்ன என்பதே படம்.
வி.சி வடிவுடையான் இயக்கத்தில் நான்கு வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட படம் `பாம்பாட்டம்’. இப்போது ஒரு வழியாக படம் வெளியீட்டுக்கு தயாராகியிருக்கிறது. மல்லிகா ஷெராவத், ஜீவன் நடிப்பில் ஒரு பீரியட் படமாக உருவாகியிருக்கிறது.
தமிழில் `அப்புச்சி கிராமம்’ என்ற சைஃபை காமெடி படம் கொடுத்தவர் விஐ ஆனந்த். அதனையடுத்து தெலுங்கில் Ekkadiki Pothavu Chinnavada, Okka Kshanam என ஹிட் படங்களைக் கொடுத்தார். இப்போது அவர் இயக்கியிருக்கும் ஃபேண்டஸி படம் `Ooru Peru Bhairavakona'. பைரவகோனா என்ற ஊரின் மர்மத்தை அறிந்து கொள்ள செல்லும் இளைஞன் சந்திக்கும் ஆபத்துகள் என்ன? அங்கிருக்கும் மர்மம் என்ன? என்பதே கதை.
ரியாஸ் ஷெரீஃப் இயக்கத்தில் பிஜூ மேனன், ஷைன் டாம் சாக்கோ நடித்திருக்கும் படம் `Thundu’. ப்ரமோஷனுக்குக் காத்திருக்கும் கான்ஸ்டெபிளுக்கு, எக்ஸாம் ரூபத்தில் வருகிறது சோதனை. அதில் பாஸ் ஆக அவர் எடுக்கும் முயற்சிகளை காமெடியாக சொல்கிறது படம்.
S. J. Clarkson இயக்கத்தில் Dakota Johnson நடித்துள்ள படம் `Madame Web'. Cassandra Webb என்ற எதிர்காலத்தை கணிக்கக் கூடிய பெண், மூன்று இளம் பெண்களுடன் இணைந்து நடத்தும் சாகசங்களே கதை.
William Eubank இயக்கத்தில் Russell Crowe நடித்திருக்கும் படம் `Land Of Bad'. அமெரிக்க டெல்ட்டா ஃபோர்ஸ் எதிரிகளின் எல்லைக்குள் நுழைந்து, பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும் என்றால், விமானப்படை கேப்டன் எட்டியின் வழிகாட்டுதல் வேண்டும். 48 மணிநேர போரட்டத்தின் முடிவு என்ன என்பதே கதை.
King Richard படத்தை இயக்கிய Reinaldo Marcus Green தற்போது இயக்கியுள்ள பயோபிக் `Bob Marley: One Love'. இசைக்கலைஞரான பாப் மார்லியின் வாழ்க்கையும், அவரது புரட்சிகரமான இசையும் எனப் பலவற்றை சொல்கிறது படம்.