House of the Dragon: S2 House of the Dragon: S2
ஓடிடி திரைப் பார்வை

இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட்டில் உங்கள் சாய்ஸ் எது..?

Johnson

House of the Dragon: S2 (English) Jio Cinema - June 17

House of the Dragon: S2

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸின் ப்ரீக்குவல் `House of the Dragon'. டார்கேரியன் வம்சாவளியின் குடும்பம், அதற்குள் நிகழ்ந்த மோதல்கள் தான் கதை. இப்போது இரண்டாவது சீசன் வாராவாரம் ஒரு எப்பிசோடாக வர இருக்கிறது.

Kota Factory: S3 (Hindi) Netflix - June 20

Kota Factory: S3

நகரங்களில் கோச்சிங் சென்டர்களில் பயிலும் மாணவர்கள், அதில் இணையும் நண்பர்கள் அவர்களின் கேம்பஸ் வாழ்க்கை தான் `Kota Factory' சீரிஸின் கதை. இதன் மூன்றாவது சீசன் இப்போது வருகிறது.

Bad Cop (Hindi) Hotstar - June 21

Bad Cop

Bad Cop ஆதித்யா தத் இயக்கத்தில் அனுராக் காஷ்யப், குல்ஷன் தேவய்யா நடித்துள்ள சீரிஸ் `Bad Cop'. இரு சகோதரர்கள் எதிர் எதிர் துருவத்தில் நிற்க, இடையில் நிகழும் சம்பவங்களே கதை.

Trigger Warning (English) Netflix - June 21

Trigger Warning

Mouly Surya இயக்கத்தில் Jessica Alba நடித்துள்ள படம் `Trigger Warning'. Special Forces கமாண்டோ தன் தந்தையின் மரணத்திக்குப் பின் இருக்கும் மர்மங்களை விசாரிக்கிறார், அவர் என்ன கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.

The Holdovers (English) Jio Cinema - June 16

The Holdovers

Alexander Payne இயக்கத்தில் Paul Giamatti நடித்த படம் `The Holdovers'. ஆக்னஸ் என்ற மாணவன் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு தன் வீட்டுக்கு செல்ல முடியாத சூழல் உருவாக, அவன் பள்ளியிலேயே தங்க வேண்டியதாகிறது. அவனைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஆசிரியர் பால் ஹூமனுக்கு செல்கிறது. மாணவன், ஆசிரியர், சமையல் கலைஞர் மேரி ஆகிய மூவரும் இந்த விடுமுறை நாட்களை சண்டையும், அன்புமாக எப்படி கடக்கின்றனர் என்பதே கதை. இப்படம் ஆஸ்கரின் சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

Sirakan (Tamil) Aha - June 18

Sirakan

வெங்கடேஷ்வராஜ் இயக்கியுள்ள படம் `சிறகன்’. தொலைந்து போன மகனைத் தேடும் எம்.எல்.ஏ கொலை செய்யப்படுகிறார். இந்த சம்பவங்கள் பின் இருக்கும் மர்மம் என்ன என்பதே கதை.

Azhagiya Kanney (Tamil) Prime - June 18

Azhagiya Kanney

விஜயகுமார் இயக்கிய படம் `அழகிய கண்ணே’. இன்பாவுக்கு சினிமாவில் இயக்குநராகும் கனவு, இன்னொரு பக்கம் மாற்று சாதியை சேர்ந்த கஸ்தூரியுடன் காதல். பல எதிர்புகளை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள். அதன் பின் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதே கதை.

Aranmanai 4 (Tamil) Hotstar - June 21

Aranmanai 4

சுந்தர் சியின் ”கஷ்டம் வரும் போது கபால்னு தொறந்து பாரு” என்ற பெட்டி தான் `அரண்மனை’ படவரிசை. இந்த நாலாவது பேய் வேட்டையில் பாக் என்ற கான்செப்ட், தங்கை செண்டிமெண்ட் என்ற சேஃபான களத்துடன் வந்தார்.

Rasavathi (Tamil) Aha - June 21

Rasavathi

`மௌனகுரு;, `மகாமுனி’படங்களைத் தொடர்ந்து சாந்தகுமார் இயக்கிய படம் `ரசவாதி’. கொடைக்கானலில் சித்தமருத்துவரா இருக்கும் சதாசிவ பாண்டியனுக்கும், அதே ஊரில் வசிக்கும் பெண்ணுக்கும் காதல். இதற்கு இடைஞ்சலாக ஒருவர் வர, பின் என்ன ஆகிறது என்பதே கதை.

Nadikar (Malayalam) Netflix - June 21

Nadikar

லால் ஜூனியர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்த படம் `Nadikar’. டேவிட் படிகல் என்ற நடிகனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே படம்.

Rail (Tamil) - June 21

Rail

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `ரயில்’. வடமாநிலத்தவர்கள் மேல் இருக்கும் தேவையற்ற வெறுப்பையும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றியும் பேசுகிறது படம். படத்தின் விமர்சனத்திற்கு க்ளிக் செய்யவும்

Laandhar (Tamil) - June 21

Laandhar | லாந்தர்

விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `லாந்தர்’. ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கிறது.

Bayamariya Brammai (Tamil) - June 21

Bayamariya Brammai பயமறியா பிரம்மை

ராகுல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `பயமறியா பிரம்மை’. எக்ஸ்பரிமெண்டல் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.

Ullozhukku (Malayalam) - June 21

Ullozhukku

நெட்ஃப்ளிக்ஸில் வெளியான Curry and Cyanide: The Jolly Joseph Case ஆவணப்படத்தை இயக்கிய கிறிஸ்டோ தற்போது, பார்வதி, ஊர்வசி நடிப்பில் இயக்கியிருக்கும் படம் `Ullozhukku’. ஊரில் வெள்ளம் சூழ்ந்துவிட, இறந்த நபரை புதைக்க, வெள்ளம் வடியும் வரை காத்திருக்கும் சூழல் குடும்பத்திற்கு. இந்த சமயத்தில் அவர்கள் புதைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் வெளிப்பட துவங்குகிறது. அதன் பின் என்ன என்பதே கதை.

Nadanna Sambhavam (Malayalam) - June 21

Nadanna Sambhavam

விஷ்ணு நாரயணன் இயக்கத்தில் பிஜூ மேனன், சுராஜ் வெஞ்சாரமூடு நடித்துள்ள படம் `Nadanna Sambhavam’. அப்பார்ட்மெண்ட் குடியிருப்புக்குள், ஒரு புது நபரின் வருகை என்ன மாதிரி விளைவுகளை கொண்டு வருகிறது என்பதே கதை.

JNU (Hindi) - June 21

JNU

Vinay Sharma இயக்கியுள்ள படம் `JNU’. சௌரப் சர்மா என்ற மாணவன் கல்லூரியில் சந்திக்கும் விஷயங்களே படம்.

Ishq Vishk Rebound (Hindi) - June 21

Ishq Vishk Rebound

நிபுன் இயக்கியிருக்கும் படம் `Ishq Vishk Rebound'. நான்கு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே கதை.

The Bikeriders (English) - June 21

The Bikeriders

Shotgun Stories படத்தின் இயக்குநர் Jeff Nichols தற்போது இயக்கியிருக்கும் படம் `The Bikeriders’. Midwestern motorcycle club எப்படி தோன்றியது, அதில் இருந்த உறுப்பினர்களின் வாழ்க்கை ஆகியவைதான் இந்தப் படத்தின் கதை.

The Exorcism (English) - June 21

The Exorcism

Russell Crowe நடித்துள்ள படம் `The Exorcism'. ஒரு ஹாரர் படத்தின் ஷூட்டிங்கின் போது நடக்கும் அமானுஷ்யமான விஷயங்கள், அவை எப்படி சரி செய்யப்படுகிறது என்பதே கதை.