despicable me 4 despicable me 4
ஓடிடி திரைப் பார்வை

தியேட்டர்ல மிஸ் பண்ணின படங்கள இந்த வார ஓடிடில பாத்துடுங்க... லிஸ்ட் இதோ..!

Johnson

Sasi Madhanam (Telugu) ETV Win - July 4

Sasi Madhanam

வினோத் இயக்கியுள்ள சீரிஸ் `Sasi Madhanam'. கடன்காரனிடமிருந்து தப்பி தலைமறைவாக இருக்க, காதலியின் வீட்டில் பதுங்குகிறான் மதன். ஆனால், காதலியின் குடும்பத்தினர் எதிர்பாராமல் வீட்டுக்கு வர அதன் பின் நடக்கும் கலாட்டாக்களே கதை.

Mirzapur S3 (Hindi) Prime - July 5

Mirzapur S3

பங்கஜ் திரிபாதி, அலி ஃபைசல், விக்ராந்த் மாஸே நடிப்பில் வெளியான சீரிஸ் `Mirzapur’. முதல் சீசன் இந்தியில் மட்டுமல்ல, முரட்டுத்தனமான டப்பிங்கால் தமிழிலும் பெரிய ஹிட். இப்போது அதன் மூன்றாவது சீசன் வெளியாக இருக்கிறது. எதிர்பாராமல் ஒரு கேங்க்ஸ்டர் குழுவில் இணையும் சகோதரர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே கதை.

Beverly Hills Cop: Axel F (English) Netflix - July 3

Beverly Hills Cop: Axel F

Eddie Murphy நடித்திருக்கும் படம் `Beverly Hills Cop: Axel F'. தன் மகளின் உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்ததும், அக்செல் சொந்த ஊருக்குத் திரும்புகிறார். அங்கு அவர் ஒரு குழுவை உருவாக்கி இந்த பிரச்சனையை எப்படி தீர்த்தார் என்பதே கதை.

Space Cadet (English) Prime - July 4

Space Cadet

Liz W. Garcia இயக்கியிருக்கும் படம் `Space Cadet'. நாசா ப்ரோக்ராமில் இணையும் ரெக்ஸ் என்ற பெண்ணின் விண்வெளிக் கனவு நிறைவேறியதா என்பதே கதை.

He Went That Way (English) Jio Cinema - July 5

He Went That Way

Jacob Elordi நடித்திருக்கும் படம் `He Went That Way'. Larry Lee Ranes என்ற சீரியல் கில்லரின் வாழ்க்கையை மைப்படுத்தி உருவாகியிருக்கிறது படம்.

Garudan (Tamil) Prime - July 3

Garudan

துரை செந்தில்குமார் இயக்கி சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன் நடித்த படம் `கருடன்’. நியாயத்தின் பக்கம் நிற்பதா, விசுவாசத்தின் பக்கம் நிற்பதா என்ற சொக்கனின் குழப்பமும், தெளிவும் தான் படம்.

Bob Marley: One Love (English) Prime - July 3

Bob Marley: One Love

King Richard படத்தை இயக்கிய Reinaldo Marcus Green இயக்கிய பயோபிக் `Bob Marley: One Love'. இசைக்கலைஞரான பாப் மார்லியின் வாழ்க்கையும், அவரது புரட்சிகரமான இசையும் எனப் பலவற்றை சொல்கிறது படம்.

Market Mahalakshmi (Telugu) Aha - July 4

Market Mahalakshmi

முகேஷ் இயக்கிய படம் `Market Mahalakshmi’. மார்கெட்டில் காய்கறி வியாபாரம் பார்க்கும் பெண் மீது காதல் கொள்ளும் இளைஞன், தன் காதலுக்காக என்ன எல்லாம் செய்கிறான் என்பதே கதை.

Haraa (Tamil) Aha - July 5

Haraa

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன் நடித்த படம் `ஹரா’. ஒரு சாதாரண மனிதன் செய்யும் அசாதாரண விஷயங்களும், அதற்கு பின் இருக்கும் காரணமும் தான் கதை.

Malayalee From India (Malayalam) SonyLIV - July 5

Malayalee From India

`Jana Gana Mana' படத்தின் மூலம் கவனம் பெற்ற டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நிவின் பாலி நடித்த படம் `Malayalee From India'. வேலையில்லாமல் பொறுப்பற்று திரியும் இளைஞன் கோபி, மனிதர்களற்ற ஒரு பாலை வனத்திற்கு வேலைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு அவர் வாழ்க்கை பற்றி புரிந்து கொள்வதே கதை.

Srikanth (Hindi) Netflix - July 5

Srikanth

`Saand Ki Aankh' படம், `Scam 2003' சீரிஸ் ஆகியவற்றை இயக்கிய Tushar Hiranandani இயக்கி, ராஜ்குமார் ராவ், ஜோதிகா நடித்த படம் `Srikanth’. பார்வை சவால் கொண்ட ஸ்ரீகாந்த் பொல்லா, எப்படி பெரிய தொழிலதிபர் ஆனார் என்ற நிஜ வாழ்க்கை சம்பவத்தை படமாக மாற்றியிருக்கிறார்கள்.

7/G (Tamil) - July 5

7/G

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள படம் `7/G'. ராஜீவ், வர்ஷா தம்பதி தங்கள் மகனுடன் புது வீட்டுக்கு குடியேறுகிறார்கள். ஆனால் அங்கு அமானுஷ்யமான விஷயங்கள் நடக்க, அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.

Naanum Oru Azhagi (Tamil) - July 5

Naanum Oru Azhagi

பொழிக்கரையான் இயக்கியுள்ள படம் `நானும் ஒரு அழகி’. கிருஷ்ணம்மா என்ற பெண்ணின் வாழ்க்கையில் நிகழும் விஷயங்களே கதை.

Poomara Kathu (Tamil) - July 5

Poomara Kathu

ஞான ஆரோக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `பூமரகாத்து’. கிராம பகுதியில் நடைபெறும் கதைக்களமாக உருவாகியிருக்கிறது.

Emagadhagan (Tamil) - July 5

Emagadhagan

கிருஷ்ணன் ராஜ் இயக்கியிருக்கும் படம் `எமகாதகன்’. சபிக்கப்பட்ட கிராமம் ஒன்றில் சிக்கிக் கொண்ட மக்கள், எப்படி அந்த சாபத்தை நீக்கினர் என்பதே கதை.

Gaganachari (Malayalam) - July 5

Gaganachari

அருண் சந்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Gaganachari'. 2040ல் நடக்கும் டிஸ்ட்ரோபியன் ஃபீயூச்சர், சைன்ஸ் பிக்‌ஷன் படம். அதில் ஏலியன், சட்டையர் என காமெடி கலந்து கொடுத்திருக்கிறார்கள்.

Kill (Hindi) - July 5

Kill

நிகில் நாகேஷ் பட் இயக்கியிருக்கும் படம் `Kill’. ஒரு டிரெய்னுக்குள் கொள்ளையர்கள் புகுந்துவிட, அவர்களை எதிர்த்து போராடுகிறார் ஹீரோ. அவர்களை வென்றாரா என்பதே மீதிக்கதை.