My3 Mark Antony Elemental  OTT
ஓடிடி திரைப் பார்வை

Mark Antony , Elemental... தியேட்டர், OTTல் இந்த வார லிஸ்ட் இதோ..!

வெள்ளிக்கிழமை படம் , வார இறுதியான சனி, ஞாயிறு மேலும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு செப் 18 விடுமுறை என மிகச் சிறப்பான நேரத்தில் வெளியாகவுள்ளது Mark Antony

Johnson

Han River Police (English) Hotstar - Sep 13 

Han River Police

சியோலில் பணியாற்றும் இரு காவலதிகாரிகள் பற்றிய கதைதான் Han River Police என்ற சீரிஸாக உருவாகியிருக்கிறது.

Thursday's Widows (Spanish) Netflix - Sep 14

Thursday's Widows

Marcelo Piñeyro இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஸ்பானிஷ் மொழி சீரிஸ் `Thursday's Widows'. தனது கணவரும், இரு நண்பர்களும் இறந்து போனபின், அதில் இருக்கும் மர்மத்தை பற்றி தேடுகிறார் தெரசா. அவருக்கு கிடைக்கும் உண்மை என்ன என்பதே கதை.

MY 3 (Tamil) Hotstar - Sep 15

MY 3

M ராஜேஷ் இயக்கத்தில் ஹன்சிகா, சாந்தனு, முகேன் ராவ் நடித்துள்ள வெப் சீரிஸ் `MY 3’. மனித தீண்டலே அலர்ஜியாக இருக்கும் ஒரு பணக்கார இளைஞர், ரோபோ செய்யச் சொல்கிறார். ஆனால் ரோபோ சொதப்பலாக, ஒரு பெண்ணையே ரோபோ என அனுப்பி வைக்கிறார் சைன்டிஸ்ட். அதன் பிறகு நடக்கும் கலாட்டாக்களே இதன் கதை.

Bambai Meri Jaan (Hindi) Prime - Sep 15

Bambai Meri Jaan

Shujaat Saudagar இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தி சீரிஸ் `Bambai Meri Jaan'. சுதந்திரத்திற்கு பிறகான பாம்பேயில் நடைபெறும் குற்றங்கள், அவற்றைத் தடுக்க நினைக்கும் ஒரு போலீஸ் பற்றிய கதைதான் இது.

Kaala (Hindi) Hotstar - Sep 15

Kaala

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தி சீரிஸ் `Kaala’. ஒரு Intelligence Bureau officer குற்றங்களை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளே கதை.

Wilderness (English) Prime - Sep 15

Wilderness

ஒரு அழகான விடுமுறை பயணம், திடீரென நடக்கும் ஒரு சம்பவத்தால் மோசமானதாக மாறுகிறது ஒரு காதல் ஜோடிக்கு. அதன் பின் என்ன ஆகிறது என்பதே `Wilderness’ சீரிஸின் கதை.

The Other Black Girl (English) Hotstar - Sep 15

The Other Black Girl

நெல்லா பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றும் ஆஃப்ரோ - அமெரிக்க பெண். அதே அலுவலகத்தில் புதிதகா கருப்பின பெண் இணைகிறார். அதன் பின் நடப்பை என்ன என்பதே `The Other Black Girl’ சீரிஸின் கதை.

Once upon a crime (Japanese) Netflix - Sep 14

Once upon a crime

ஃபேண்டசி கதைகளத்தோடு வருகிறது ஜப்பானிய மொழிப் படமான `Once upon a crime’. ஒரு மர்மமான விஷயத்தை கண்டுபிடிக்கும் Red Riding Hood பற்றிய கதைதான் இது.

A Million Miles Away (English) Prime - Sep 15

A Million Miles Away

Alejandra Márquez Abella இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `A Million Miles Away’. Jose Hernandez என்ற புலம்பெயர் தொழிலாளியை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிதான் படத்தின் கதை.

Love at First Sight (English) Netflix - Sep 15

Love at First Sight

Hadley and Oliver இருவரும் முதன் முதலில் விமான பயணத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே ஒருவருக்கொருவர் பிடித்துப் போய்விடுகிறது. மொபைல் எண் கூட பரிமாறிக் கொள்ளாத இருவரும் மீண்டும் இவர்கள் சந்திக்க வேண்டும் என நினைக்கும் போது என்ன நடக்கிறது என்ற `எனக்கு 20 உனக்கு 18’ கதையே `Love at First Sight'

El Conde (Spanish) Netflix - Sep 15

El Conde

Augusto Pinochet 250 வருடங்கள் வாழ்ந்துவிட்ட ஒரு ரத்தக்காட்டேரி. வாழ்ந்து வாழ்ந்து போரடித்துவிட, சாகலாம் என்ற முடிவுக்கு வருகிறார். அவர் நினைத்தபடி சாக முடிந்ததா இல்லையா எனக் காமெடி கலந்து சொல்லியிருக்கும் ஸ்பானிஷ் படமே `El Conde'

Elemental (English) Hotstar - Sep 13

Elemental

பிக்ஸார் தயாரிப்பு என்றாலே தரமாக தான் இருக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் `Elemental’. இயற்கையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு இனமாக பிரிந்து வாழும் நகரமே எலமெண்டல். இதில் நீர் இனத்தைச் சேர்ந்த Wade மற்றும் நெருப்பு இனத்தைச் சேர்ந்த Ember இருவரும் காதலிக்கிறார்கள். அதன் பின் நடப்பது என்ன என்பதே கதை.

Ramabanam (Telugu) Netflix - Sep 14

Ramabanam

கோபிசந்த் நடிப்பில் உருவான தெலுங்குப் படம் `Ramabanam’. இரு சகோதரர்கள் சித்தாந்தங்களில் வேறுபட்டாலும், இருவருக்கும் லட்சியம் ஒன்றுதான். அதனை எப்படி போராடி அடைகிறார்கள் என்பதே கதை.

Aneethi (Tamil) Aha - Sep 15

Aneethi

வசந்தபாலன் இயக்கத்தில் உருவான படம் `அநீதி’. ஒரு ஃபுட் டெலிவரி செய்யும் இளைஞன், அவன் சந்திக்கும் பிரச்சனைகள் இவையே படத்தின் கதை.

Bhola Shankar (Telugu) Netflix - Sep 15

Bhola Shankar

வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவானது `Bhola Shankar'. தங்கையை பாதுகாக்க அண்ணன் நடத்தும் வேட்டையே படத்தின் கதை. படத்தின் விமர்சனத்தைப் படிக்க க்ளிக் செய்க - Bhola Shankar

Mayapetika (Telugu) Aha - Sep 15

ரமேஷ் இயக்கத்தில் உருவான தெலுங்குப் படம் `Mayapetika’. ஒரு மொபைல் போன் பல கைகளுக்கு மாறுகிறது. அது சென்று சேர்பவர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசும் படமே இது.

18+ (Malayalam) SonyLIV - Sep 15

18+

ஜோ & ஜோ படத்தைத் தொடர்ந்து அருண் டி ஜோஷ் இயக்கத்தில் உருவான மலையாளப் படம் `18+'. Akhil - Athira இருவரும் காதலர்கள். ஆனால் குடும்பத்தாலும் சமூகத்தாலும் இவர்களுக்கு வரும் சிக்கல்கள் என்ன? என்பதே படத்தின் கதை.

Digital Village (Malayalam) Prime - Sep 15

Digital Village

மூன்று நண்பர்கள் இணைந்து தொழிநுட்ப அறிவை தங்களது கிராமத்தில் பரப்ப நினைக்கிறார்கள். அவர்களுக்கு வரும் சவால்கள் என்ன என்பதே `Digital Village' மலையாளப்படத்தின் கதை.

Hostel Hudugaru Bekagiddare (Kannada) Zee5 - Sep 15

Hostel Hudugaru Bekagiddare

நிதின் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவான கன்னடப் படம் `Hostel Hudugaru Bekagiddare'. ஒரு ஹாஸ்டலில் ஒரு நாள் இரவில் நடக்கும் கலாட்டாவான சம்பவங்களே படத்தின் கதை.

Mark Antony (Tamil) - Sep 15

Mark Antony

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் படம் `மார்க் ஆண்டனி’. டைம்ட்ராவல் செய்ய உதவும் போன் கேங்ஸ்டர் கையில் சிக்க, அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.

No.6 Vaathiyaar Kaalpandhatta Kuzhu (Tamil) - Sep 15

No.6 Vaathiyaar Kaalpandhatta Kuzhu

ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `எண்.6 வாத்தியார் கால்பந்தாட்டக்குழு’. ஒரு கால்பந்தாட்ட குழுவும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுமே படத்தின் கதை.

Changure Bangaru Raja (Telugu) - Sep 15

Changure Bangaru Raja

மூன்று நபர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசும் படம், அவர்கள் ஒரு கொலை வழக்கில் குற்றவாளிகள் என சந்தேகத்துக்கு உள்ளாகின்றனர், அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே `Changure Bangaru Raja' தெலுங்குப் படத்தின் கதை.

Kasargold (Malayalam) - Sep 15

Kasargold

ம்ரிதுள் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மலையாளப்படம் `Kasargold’. ஆல்பர்ட் - ஃபாசில் இருவரும் தங்க கடத்தல் செய்பவர்கள். கடைசியாக ஒரு ரிஸ்க்கான கடத்தலை செய்து முடித்தால், வாழ்நாள் முழுவதும் சொகுசாக வாழலாம் என்ற வாய்ப்பு வர, என்ன செய்கிறார்கள் என்பதே கதை.

Tales Of Mahanagara (Kannada) - Sep 15

Tales Of Mahanagara

ராஜீவ் கிரண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கன்னடப்படம் `Tales Of Mahanagara'. ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத மூன்று பேர் ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே கதை.

A Haunting in Venice (English) - Sep 15

A Haunting in Venice

Agatha Christie மர்ம நாவல்களைத் தழுவி உருவான `Murder on the Orient Express’, `Death on the Nile’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படமாக உருவாகியிருக்கிறது `A Haunting in Venice’. டிடெக்டிவ் Hercule Poirot இந்த முறை விசாரிக்கும் மரணம் யாருடையது, கொலையாளி யார் என்பதே படத்தின் கதை.