Sashikanth Srivaishnav Peesapati இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்கு சீரிஸ் `Vyooham'. ஒரு காவலதிகாரி விசாரிக்கும் ஒரு கேஸ், எங்கெல்லாம் பயணிக்கிறது என்பதே கதை.
ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது The Crown. இரண்டாம் எலிசபெத் வாழ்க்கை வரலாற்றுத் தொடரான இதனை ஆறு சீசன்களாக கொடுத்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். இப்போது ஆறாவது சீசனின் கடைசி பாகமாக இரண்டாவது பார்ட் வருகிறது.
Avinash Kamath எழுதிய 'A Ticket To Syria' புத்தகத்தின் சீரிஸ் வெர்ஷன் தான் செப்டம்பரில் வெளியான `The Freelancer'. தற்போது இதன் இரண்டாம் சீசன் வெளியாகிறது. சிரியா போரில் சிக்கிக் கொண்ட ஒரு பெண்ணை மீட்க செல்லும் ஒரு முன்னாள் காவலதிகாரியின் கதை தான் இது.
Lee Child எழுதிய Jack Reacher novel seriesல் Killing Floor நாவலை மையமாக வைத்து உருவானது 2022ல் வெளியான Reacher. தற்போது இரண்டாவது சீசன் வெளியாகிறது. எந்த இலக்குமின்றி பயணிக்கும் ரீச்சருக்கு, அவரது குழுவில் பணியாற்றிய நபர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக மெசேஜ் வருகிறது. அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க தன் டீமுடன் இணைந்து செய்யும் அதிரடிகள் தான் கதை.
Kevin Hart மற்றும் Chris Rock இந்த இரு ஸ்டாண்டப் காமெடியன்களின் வாழ்க்கைப் பயணம் பற்றி சொல்லும் ஆவணப்படம் தான் `Kevin Hart & Chris Rock: Headliners Only'.
சரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆவண தொடர் `கூசி முனிசாமி வீரப்பன்’. வீரப்பன் பற்றி நாம் பார்க்காத பல வீடியோக்களோடு தயாராகியிருக்கிறது. நேரடியாக ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியது, செய்த கொலைகள் பற்றி ஒப்புக் கொள்வது எனப் பல விஷயங்கள் அடங்கியிருக்கிறது. ஆறு எப்பிசோடுகளாக வந்திருக்கும் முதல் சீசன், அடுத்து வர இருக்கும் இரண்டாவது சீசனை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கிறது.
இந்தி திரைப்படத் துறை மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் வாழ்க்கையில் என்ன சிக்கல்கள் இருக்கிறது, என்ன தடைகள் உள்ளது என்பது பற்றி விவரிக்கிறது இந்தியில் உருவாகியிருக்கும் `First Act' ஆவண தொடர்.
Sam Fell இயக்கத்தில் உருவாகியிருக்கும் அனிமேஷன் படம் `Chicken Run: Dawn of the Nugget’. ஒரு கோழி கூட்டத்திற்கு வரும் ஆபத்து, அதிலிருந்து அந்தக் குழு எப்படித் தப்பிக்கிறது என்பதே கதை.
ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் `ஜப்பான்’. ஊரையே கலக்கும் கொள்ளையனை பிடிக்க துரத்துகிறது போலீஸ், அவன் சிக்கினானா இல்லையா என்பதுதான் கதை.
காளி வெங்கட், பூ ராமு நடித்த படம் `கிடா’. தீபாவளிக்கு தன் பேரனுக்கு புதுதுணி எடுத்துக் கொடுக்க போராடும் ஒரு தாத்தாவின் ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதே கதை.
Sriman Keerthi இயக்கத்தில் உருவான தெலுங்குப்படம் `Raakshasa Kaavyam'. அஜய் - விஜய் இருவரும் மோசமானவர்கள், இவர்களிடம் ஒரு இளைஞன் மாட்டிக் கொள்கிறான். இதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.
கல்யாணி ப்ரியதர்ஷன் லீட் ரோலில் நடித்த மலையாளப்படம் `Sesham Mike-il Fathima’. Football commentator ஆக ஆசைப்படும் ஒரு பெண்ணின் பயணத்தைப் பற்றியதே கதை.
பேசில் சோசஃப் லீட் ரோலில் நடித்த மலையாளப்படம் `Family’. ஒரு குடும்பம் வாரணாசிக்கு கிளம்புகிறது, இந்தப் பயணத்தில் நடக்கும் கலாட்டாக்களே கதை.
விஜய் குமார் நடிப்பில் அப்பாஸ் இயக்கியிருக்கும் படம் `ஃபைட் க்ளப்’. பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரி வாழ்க்கைக்கு செல்லும் ஒரு இளைஞன், அவன் சந்திக்கும் சிக்கல்கள் பற்றிய கதை.
வைபவ், முண்டாசுப்பட்டி ராமதாஸ் நடித்திருக்கும் படம் `ஆலம்பனா’. மார்டன் டேயில் ஒரு அலாவுதீன் கதையை எடுத்திருக்கிறார்கள்.
கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதாப், சாலின் ஸோயா நடித்திருக்கும் படம் `கண்ணகி’. நான்கு பெண்கள் இந்த சமூகத்தின் அழுத்தங்களால் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படம்.
புவன் ராஜகோபாலன் இயக்கியிருக்கும் படம் `விவேசினி’. மிக மர்மமான, பேய்கள் நடமாட்டம் உள்ளது என சொல்லப்படும் காட்டுக்குள், சக்தியும் அவளது நண்பர்களும் செல்கிறார்கள். அதன் பின் அவர்கள் தெரிந்து கொள்ளும் உண்மைகளே கதை.
இவற்றோடு தமிழில் அகோரி, தீதும் சூதும், பாட்டி சொல்லைத் தட்டாதே, ஸ்ரீ சபரி ஐயப்பன் போன்ற படங்களும் வெளியாகிறது.
Saikiran Daida இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படம் `Pindam. பேச்சுக் குறைபாடு கொண்ட ஆறு வயது குழந்தை தீய ஆத்மாவால் ஆட்கொள்ளப்படுகிறாள். அவளைக் காப்பாற்ற அவளது குடும்பம் செய்யும் முயற்சிகளே கதை.
தியான் ஸ்ரீனிவாசன், ப்ரயாகா மார்டின் நடித்துள்ள மலையாளப்படம் `Bullet Diaries'. ஒரு மெக்கானிக்கிற்கு வரும் பிரச்சனை, அதை அவர் எப்படி சரி செய்கிறார் என்பதே கதை.
Broken Arrow, Face/Off, Mission: Impossible 2 போன்ற படங்களில் இயக்குநர் John Woo இயக்கத்தில் உருவான படம் `Silent Night’. தனது மகனின் சாவுக்குக் காரணமான, கும்பலை பழி தீர்க்க கிளம்பும் ஒரு தந்தையைப் பற்றிய கதை.