திருநங்கையும் சமூக செயற்பாட்டாளருமான கௌரி சாவந்த் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இந்தி சீரிஸான `Taali '. சுஸ்மிதா சென் திருநங்கை கௌரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
12 வயது சிறுவன் ஜோடி. தனக்கு ஜீசஸ் போன்று சக்திகள் இருப்பதை உணர்ந்த பின் அவன் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான், ஸ்பானிஷ் மொழியில் உருவாகியிருக்கும் ‘The Chosen One' சீரிஸின் கதை.
`கிடாரி’, `குயின்’ இயக்குநர் பிரசாத் முருகேசன் தற்போது `மத்தகம்’ என்ற வெப்சீரிஸை இயக்கியிருக்கிறார். ஒரு இரவில் போலீஸுக்கும், ஒரு கேங்க்ஸ்டருக்கும் இடையில் நடக்கும் மோதல் தான் கதை.
Raj and DK இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தி சீரிஸ் `Guns And Gulaabs'. போதைப் பொருள் கடத்தலுக்குள் ஒரு போலீஸும், ஒரு மெக்கானிக்கும் புகுந்த பின் என்ன நடக்கிறது என்பது தான் சீரிஸின் கதை. படு காமெடியாக எடுக்கப்பட்டிருக்கும் சீரிஸில் துல்கர் சல்மான், ராஜ்குமார் ராவ் நடித்திருக்கிறார்கள்.
Mickey Bolitar நியூ ஜெர்ஸியில் ஒரு புதிய பள்ளியில் சேருகிறான். அங்கு அவன் சந்திக்கும் பாட்டியும், அவள் சொல்லும் விஷயங்களும் மிக்கியின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதே `Harlan Coben's Shelter' சீரிஸின் கதை.
ஜானி டெப் - அம்பர் ஹெர்ட் விவாகரத்தைப் பற்றிய ஆவணத்தொடர் தான் `Depp V Heard'. இவர்களின் விவாகரத்தில் நடைபெற்ற வாத, பிரதி வாதங்கள் உட்பட பல விஷயங்களை தொகுத்து ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
தமர் இயக்கத்தில் உருவான மலையாளப்படம் `1001 Nunakal’. நண்பர்கள் குழு பல காலத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு டின்னருக்கு இணைகிறார்கள். அப்போது அதிலொருவர் ஒரு விளையாட்டு விளையாடலாம் என ஆரம்பிக்க, விளையாட்டு வினையாவதே கதை.
Anthony Stacchi இயக்கத்தில் உருவாகியிருக்கும் அனிமேஷன் படம் `The Monkey King'. பிரசித்தி பெற்ற சைனீஸ் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. மந்திரக் கோல் வைத்திருக்கும் குரங்கு ஒன்றின் பயணம் தான் படத்தின் கதை.
கிரண் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மலையாளப்படம் `Vishudha Mejo'. மேஜோ - ஜீனா இருவரும் சிறு வயதிலிருந்து நண்பர்கள். சென்னைக்குப் படிக்க சென்ற ஜீனா பல வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வருகிறாள். அவளிடம் தன் காதலை மேஜோ சொன்னானா இல்லையா என்பதே கதை.
நிஷாத் இப்ரஹிம் இயக்கத்தில் உருவான மலையாளப்படம் `Amala'. நகரத்தில் நடக்கும் தொடர் கொலைகள் பற்றி விசாரிக்கும் காவலதிகாரியின் கதைதான் படம்.
ராஜமௌலி தெலுங்கில் இயக்கிய சத்ரபதி படத்தின் இந்தி ரீமேக்காக உருவானது Chatrapathi. தாயை பிரிந்து ஒரு சிறுவன் வளர்ந்து பெரிய டான் ஆகிறான். அதன் பின் மீண்டும் அவன் குடும்பத்துடன் இணைய முயற்சிக்கும் போது என்ன சவால்கள் வருகிறது, அதை எப்படி சமாளிக்கிறான் என்பதே கதை.
Ángel Manuel Soto இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Blue Beetle'. டிசி காமிக்ஸின் கதாபாத்திரமான Blue Beetleலை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. Jaime Reyes என்ற இளைஞனுக்கு ஏலியனிக் டெக்னாலஜி மூலம் அபரிமிதமான சக்திகள் கிடைக்கிறது. அதை வைத்து அவன் தடுக்கும் ஆபத்தி என்ன என்பதுதான் கதை.
ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படம் `Mr Pregnant'. கௌதம் - மஹி தம்பதி குழந்தை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கிறார்கள். ஆனால் குழந்தையை கௌதம் சுமந்து பிரசவிக்க முடிவெடுக்கிறார்கள். இந்த முடிவுக்கு குடும்பத்திலும், சமூகத்திலும் எதிர்ப்புகள் எழுகிறது. இதை எப்படி சமாளித்தார்கள் என்பதுதான் கதை.
ஸ்ரீகாந்த அட்டாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படம் `Peddha Kapu: Part 1'. ஒரு கிராமத்தில் நடக்கும் சண்டைகள், பகையுணர்வு பற்றிய கதை. இரு பாகங்களாக படம் வெளியாகவிருக்கிறது.
தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாளப்படம் `ஜெயிலர்’. சாந்தாராம் ஜெயிலராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை, அதை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை.
பால்கி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்திப் படம் `Ghoomer’ கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் அனியா, விபத்து ஒன்றில் ஒரு கையினை இழந்துவிடுகிறார். ஆனாலும் தன்னுடைய கனவுகளை நோக்கி ஓடி, ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆகிறார் என்பதுதான் கதை. அபிஷேக் பச்சன், சயாமி கௌர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
Gary Shore இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஹாரர் படம் `Haunting of The Queen Mary’. இரண்டு குடும்பங்கள் RMS Queen Mary என்ற கப்பலில் பயணிக்கிறது. முதல் குடும்பம் 1938ம் ஆண்டு ஹாலோவீனிலும், இரண்டாவது குடும்பம் நிகழ்காலத்திலும். முதல் குடும்பத்திற்கு என்ன ஆனது, நிகழ் காலத்தில் பயணிக்கும் இரண்டாம் குடும்பம் என்ன அமானுஷ்யங்களை எல்லாம் சந்திக்கிறது என்பதே படத்தின் மீதிக் கதை.