நித்யா மெஹ்தா உருவாக்கியுள்ள சீரிஸ் `Big Girls Don't Cry'. பள்ளியில் இறுதியாண்டு பயிலும் ஏழு மாணவிகள் பற்றிய கதை. அவர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்கள், பிரச்சனைகள் பற்றி அலசும் Coming-Of-Age சீரிஸ்.
Invincible காமிக்ஸை மையமாக வைத்து அதே பெயரில் உருவானது அனிமேஷன் சீரிஸ். பதின் வயது மார்க் கேரிசன், தனது 17வது பிறந்த நாளுக்குப் பிறகு தனக்குள் இருக்கும் சூப்பர் பவர்களை உணர்கிறான். அவனது தந்தை நோலன் உலகிலேயே பெரிய சூப்பர்ஹீரோ. அவர் மூலமாக மார்க் என்ன கற்றுக் கொள்கிறான் என்பதே கதை. முதல் சீசனுக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இரண்டாவது சீசனின் இரண்டாம் பாகம் வெளியாகிறது.
தேஜா இயக்கத்தில் உருவான சீரிஸ் `Save the Tigers', தற்போது அதன் இரண்டாவது சீசன் அருண் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. திருமண வாழ்வில் விரக்தியடைந்த மூன்று கணவர்களைப் பற்றிய காமெடிகளே களம்.
புகழ்பெற்ற மெடிக்கல் ட்ராமா சீரிஸ் `Grey’s Anatomy'யின் இருபதாவது சீசன் வருகிறது. புதிதாக இணைந்த ஐந்து இன்டர்ன்களுக்கும், அவர்களின் சூப்பர்வைசர்கள், இவர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை பற்றிய சீரிஸாக துவங்கியது. இதில் நடைபெறும் பல நிகழ்வுகளின் படி கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
Carl Franklin இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Manhunt’. ஆப்ரகாம் லிங்கனின் படுகொலை தொடர்பான விறுவிறுப்பான சீரிஸாக உருவாகியிருக்கிறது.
புகழ்பெற்ற மெக்சிகன் ஒவிய கலைஞர் ஃப்ரிடா பற்றிய ஆவணத்தொடரே `Frida’. அவரது டைரிக்குறிப்புகள், கடிதங்கள், பத்திரிகை பேட்டிகள், கட்டுரைகள் என அவரின் வார்த்தைகள் வழியாகவே அவரது வாழ்வை சொல்லும் படி உருவாக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்டின், The Eras Tour இசைக்கட்சேரியைப் பற்றிய படமே `Taylor Swift: The Eras Tour’.
Yosep Anggi Noen இயக்கியுள்ள படம் `24 Hours with Gaspar’. கேஸ்பர் என்ற டிடெக்டிவ், தனது குழந்தை காலத்து நண்பனை தேடிக் கண்டுபிடிக்கும் போராட்டமே கதை. அதுவும் 24 மணி நேரத்துக்குள்.
ஆகஷ் பிக்கி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Mixup’. இரண்டு திருமண ஜோடிகள், ஒரே ரிசார்ட்டிற்கு வருகிறார்கள். அங்கு அதன் பின் நடக்கும் சம்பவங்களே கதை.
இந்தியில் Cocktail, Finding Fanny, Angrezi Medium ஆகிய பாடங்கள், Saas, Bahu Aur Flamingo சீரிஸ் ஆகியவற்றை இயக்கியவர் ஹோமி அடஜனியா. இப்போது அவர் இயக்கியுள்ள சீரிஸ் `Murder Mubarak'. ஒரு பணக்கார வீட்டில் நிகழும் கொலை, அதை செய்தது யார் என விசாரிக்கும் போலீஸ் என்ற மர்டர் மிஸ்ட்ரி படம்.
ஆனந்த் ஏகர்ஷி இயக்கிய படம் `Aattam’. பல ஆண்கள் நிறைந்த நாடகக் குழுவில் ஒரே ஒரு பெண் அஞ்சலி. அவருக்கு நடக்கும் ஒரு சம்பவமும், அதற்கான எதிர்வினைகளுமாக நகர்கிறது படம். இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்று. தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம்.
`டிக்கிலோனா’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் யோகி - சந்தானம் கூட்டணியில் உருவான படம் `வடக்குப்பட்டி ராமசாமி’. 60-70 காலகட்டங்களில், கடவுள் நம்பிக்கையை வைத்து நடக்கும் மோசடிகள் பற்றிய காமெடி படமாக வந்தது.
Jon Erwin, Brent McCorkle இயக்கிய படம் `Jesus Revolution'. பாஸ்டர் Chuck Smith தன்னுடய பகுதியில் உள்ள சர்ச் மெல்ல மெல்ல வலுவிலந்து வருவதையும், இளம் தலைமுறையினருடன் இணக்கமாக முடியவில்லை எனவும் வருந்துகிறார். அப்போது அவர் வாழ்க்கையில் நுழையும் ஒருவரால் என்ன மாற்றம் நடக்கிறது என்பதே கதை.
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து வெளியான படம் `Bramayugam’. 17ம் நூற்றாண்டில் நடைபெறும் கதை. தேவன் என்ற பாடகன், ஒரு வீட்டில் தஞ்சமடைகிறான். அவ்வீட்டின் எஜமான், சமையல்காரன் மற்றும் தேவன் இடையே அடுத்து நடப்பவையே கதை. ப்ளாக் அண்ட் ஒய்டில் ஒரு ஹாரர் படத்தை வித்யாசமாகக் கொடுத்திருந்தனர்.
பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படம் ` Hanu-Man'. இன்னும் தெலுங்குப் பதிப்பு ஓடிடியில் வெளியாகாத நிலையில், படத்தின் இந்தி டப் வெர்ஷன் வெளியாகிறது. அஞ்சனாதிரி என்ற கிராமத்தில், அனுமனின் சக்திகள் கிடைத்த ஒரு இளைஞனுக்கும், அதை அவனிடமிருந்து பறிக்க நினைக்கும் வில்லனுக்குமான போராட்டமே கதை.
சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர் கே சுரேஷ் நடித்திருக்கும் படம் `காடுவெட்டி’. படத்தின் பெயரே படத்தின் கதையை கூறியிருக்கும், அதை தனியாக விவரிக்க அவசியமில்லை.
ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் படம் `யாவரும் வல்லவரே’. ராணுவ வீரர் ஒருவரின் மறைவுக்குப் பின் அவரது உடல் வீட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது. அந்த துக்க நிகழ்வை சாதி அரசியலாக்க பார்க்கும் சிலரின் முயற்சிகளால் என்ன நடக்கிறது என்பதே கதை.
பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மகேந்திரன் நடித்துள்ள படம் `அமிங்கோ கேரேஜ்’. அப்பா - மகனை மையப்படுத்திய ஒரு கேங்க்ஸ்டர் ட்ராமாவாக உருவாகியிருக்கிறது.
Gangster Story
Thanneer Mathan Dinangal, Super Sharanya என இரண்டு சிறப்பான படங்களைக் கொடுத்த கிரிஷ், அடுத்து இயக்கிய படம் `Premalu'. மலையாளத்தில் ஹிட்டாகி, தெலுங்கு டப் ரிலீஸிலும் ஹிட்டான படம். இப்போது தமிழ் டப்பிங்கில் வெளியாகிறது. சச்சினுக்கு ரீனு மேல் காதல், அந்தக் காதலை சொல்ல அவன் படும் பாடுகளும், காமெடிகளுமே கதை.
சத்யநாராயணா இயக்கியுள்ள படம் `Razakar’. 1948ல் ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிய படமாக உருவாகியிருக்கிறது.
`The Kerala Story’ மூலம் புயலைக் கிளப்பிய Sudipto Sen தற்போது இன்னொரு சர்ச்சையாக `Bastar: The Naxal Story' படத்துடன் வந்திருக்கிறார். சத்தீஸ்கரில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருப்பதாய் சொல்லப்படுகிறது.
Sagar Ambre, Pushkar Ojha இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ள படம், `Yodha’. கடத்தப்படும் விமானம் ஒன்றை மீட்கப்போராடும் வீரரின், சாகசங்களே கதை.
Shrek Forever After, Alvin and the Chipmunks: Chipwrecked, Trolls, The Lego Movie 2: The Second Part போன்ற அனிமேஷன் படங்களை இயக்கிய Mike Mitchell தற்போது இயக்கியிருக்கும் அனிமேஷன் படம் `Kung Fu Panda'வின் நான்காவது பாகம். போ என்ற பாண்டா கரடிக்கு இம்முறைவரும் சவால்களை எப்படி சந்திக்கிறது என்பதே கதை.