இந்த வார OTT, Theatre லிஸ்ட் புதிய தலைமுறை
சினிமா

INDIAN 2 | MAHARAJA | Teenz | Ekam... இந்த வார ஓடிடி தியேட்டர் வாட்ச்லிஸ்ட் இதோ..!

INDIAN 2, MAHARAJA, Teenz, Ekam... என நீளும் இந்த வார ஓடிடி தியேட்டர் வாட்ச்லிஸ்ட் இதோ..!

Johnson

INDIAN 2, MAHARAJA, Teenz, Ekam... என நீளும் இந்த வார ஓடிடி தியேட்டர் வாட்ச்லிஸ்ட் இதோ..!

Series

Commander Karan Saxena (Hindi) Hotstar - July 8

ஜதின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Commander Karan Saxena'. ரா ஏஜென்ட் கரண், வெளிக்கொண்டு வரும் மர்மங்களைப் பற்றிய கதை.

Sunny (English) Apple TV+ - July 10

Colin O’Sullivan எழுதிய The Dark Manual புத்தகத்தை தழுவி உருவாகியிருக்கும் சீரிஸ் `Sunny’. தனது கணவன் மற்றும் மகன் ஒரு விமான விபத்தில் இறந்துவிட தனிமையில் வாழ்கிறாள் சூசி. அவளது வாழ்வில் ஒரு ரோபோ வருகிறது, அதன் பின் நடப்பவையே கதை.

Vikings: Valhalla S3 (English) Netflix - July 11

வைக்கிங் குழுவின் அடுத்த கட்ட நிகழ்வுகளே கதை.

36 Days (Hindi) SonyLIV - July 12

விஷால் ஃபவுரியா இயக்கத்தில் நேஹா ஷர்மா நடித்துள்ள சீரிஸ் `36 Days'. பொய்கள், துரோகம், காதல் எனப் பலவற்றைப் பற்றி கூறும் கதை.

Pill (Hindi) Jio Cinema - July 12

ரிதேஷ் தேஷ்முக் நடித்திருக்கும் சீரிஸ் `Pill’. மருந்துகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதன் மருத்துவர்கள், மெடிகல் ரெஃப், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் எனப் பலரது பங்கு, மருத்துவ உலகில் நடக்கும் குற்றங்களுக்கு எப்படி உதவுகிறது எனச் சொல்கிறது சீரிஸ்.

Showtime S1 P2 (Hindi) Hotstar - July 12

மிர் தேசாய் - அர்சித் குமார் இயக்கிய சீரிஸ் `Showtime’. முதல் சீசனில் பாதி வெளியான நிலையிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றது. பாலிவுட் உலகில், நடக்கும் ஈகோ மோதல்களை மையமாக வைத்து நகரும் கதை. ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் உரிமைக்காக எழுந்த சண்டை இன்னும் என்ன வடிவெல்லாம் எடுக்கிறது என்பதை சீசனின் இரண்டாம் பாகத்தில் பார்க்க வேண்டும்.

Me (English) Apple TV+ - July 12

Michael Dowse இயக்கியுள்ள சீரிஸ் `Me’. 12 வயது பென் பள்ளியில் பலவிதமான வம்புகளையும் சந்திக்கிறான். அப்போது, உருவத்தை மாற்றும் சூப்பர் பவர் தனக்கு இருப்பதை உணர்கிறான். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

Ekam (Kannada) Ekam Channel - July 13

ஷங்கர் - விவேக் இயக்கியுள்ள சீரிஸ் `Ekam’. கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள மக்கள், அவர்களின் கதைகளை சொல்லும் சீரிஸ்.

OTT

Wild Wild Punjab (Hindi) Netflix - July 10

சிமார்ப்ரீத் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `Wild Wild Punjab'. நான்கு நண்பர்கள் இணைந்து ஒரு ரோட் ட்ரிப்பில் பஞ்சாப் செல்கிறார்கள். அங்கு ஒரு பிரச்சனையை சரி செய்ய முயலும் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே கதை.

Divorce in the Black (English) Prime - July 11

Tyler Perry இயக்கியுள்ள படம் `Divorce in the Black'. ஏவா - டல்லாஸ் தம்பதியின் சிக்கல் மிகுந்த திருமண வாழ்க்கை பற்றிய படம்.

Kakuda (Hindi) Zee5 - July 12

ஆதித்யா இயக்கியிருக்கும் படம் `Kakuda’. ஒரு கிராமத்தில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களுக்கு பின்னாலிருக்கும் மர்மங்களே படம்.

Descendants: The Rise of Red (English) Hotstar - July 12

Jennifer Phang இயக்கியிருக்கும் படம் `Descendants: The Rise of Red'. ஒரு ஃபேண்டஸி படமாக உருவாகியிருக்கிறது.

Post Theatrical Digital Streaming

Hit List (Tamil) Prime and Aha - July 9

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமான படம் `ஹிட்லிஸ்ட்’. விஜயின் அம்மாவும் தங்கையும் கடத்தப்படுகிறார்கள். அவர்களை உயிருக்கு விலையாக சிலரது உயிரை எடுக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

Election (Tamil) Prime - July 10

`சேத்துமான்’ படத்தை இயக்கிய தமிழ் அடுத்து இயக்கிய படம் `எலக்‌ஷன்’. அரசியலுக்குள் நுழையும் இளைஞன் சந்திக்கும் விஷயங்களே படம்.

Harom Hara (Telugu) Aha - July 11

ஞானசேகர் த்வாரகா இயக்கத்தில் சுதீர் பாபு நடித்த படம் `Harom Hara'. 1980களில் வேலை வாய்ப்பு இல்லாமல், சட்டத்துக்கு புறம்பான ஆயுத உற்பத்திக்குள் நுழையும் நபர், எப்படி ஆயுத சாம்ராஜ்யத்தை உருவாக்கினான் என்பதே கதை.

Plot (Telugu) Etv Win - July 11

பானு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Plot'. முதல் முறையாக தன் தொழிலில் வெற்றியைப் பார்க்கும் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட், அதைத் தக்க வைக்க செய்யும் முயற்சிகளே படம்.

Mean Girls (English) Prime - July 11

Samantha Jayne, Arturo Perez Jr இயக்கிய படம் `Mean Girls'. புது பள்ளிக்கு மாற்றலாகி வரும் பெண் சந்திக்கும் சிக்கல்களே படம்.

Maharaja (Tamil) Netflix - July 12

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவானது `மஹாராஜா’. லக்‌ஷ்மி காணாமல் போனது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் மஹாராஜாவின் தேடலே கதை.

Pagalariyaan (Tamil) Netflix - July 12

முருகன் இயக்கத்தில் வெற்றி நடித்த படம் `பகலறியான்’. பல நபர்கள் சம்பந்தப்பட்ட க்ரைம் த்ரில்லர் படம். 

Jilebi (Telugu) Aha - July 12

விஜய் பாஸ்கர் இயக்கத்தில் ஸ்ரீகமல், ஷிவானி ராஜசேகர் நடித்த படம் `Jilebi’. ஒரு நண்பர்கள் குழு, பிரச்சனை ஒன்றிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதே கதை.

Mandakini (Malayalam) manoramaMAX - July 12

வினோத் லீலா இயக்கத்தில் அல்தாஃப் - அனார்கலி நடித்த படம் `Mandakini’. அரோமல் - அம்பிலி தம்பதியின் வாழ்க்கை, ஒரு சம்பவத்தால் என்ன ஆகிறது என்பதே கதை.

Theatre

Indian 2 (Tamil) - July 12

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் `இந்தியன் 2’. சேனாபதி கம்பேக் கொடுத்து, இம்முறை எதை சரிசெய்கிறார் என்பதே கதை.

Teenz (Tamil) - July 12

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `டீன்ஸ்’. டீன் ஏஜ் மாணவர்கள் சில செல்லும் ஒரு ட்ரிப் எதிர்பாரத விதமாக ஒரு அட்வென்சர் ட்ரிப்பாக மாறுகிறது. அவர்கள் அதை எப்படி சமாளித்தார்கள் என்பதே கதை.

Sarfira (Hindi) - July 12

சுதா இயக்கத்தில் சூர்யா நடித்த `சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக் `Sarfira'. குறைந்த விலையில் விமான பயணம் என்ற நாயகனின் கனவு நிறைவேறியதா என்பதே கதை

Longlegs (English) - July 12

Oz Perkins இயக்கியிருக்கும் படம் `Longlegs'. சீரியல் கில்லர் ஒருவனைப் பிடிக்க துரத்தும் FBI ஏஜென்டின் கதை. 

Fly Me to the Moon (English) - July 12

Greg Berlanti இயக்கத்தில் Scarlett Johansson, Channing Tatum நடித்துள்ள படம் `Fly Me to the Moon’. fake moon landing எப்படி நடந்தது என்பது பற்றிய கதையாக உருவாகியிருக்கிறது.