சினிமா

தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விருது விழா: இது 2-வது முறை!

webteam

இந்த வருட ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளர் இல்லாமல் நடைபெற உள்ளது. ஆஸ்கர் வரலாற்றில் தொகுப்பாளர் இல் லாமல் நடைபெறுவது இது இரண்டாவது முறை.

ஹாலிவுட் சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப் பட்டு வருகிறது. சிறந்த திரைப் படம், சிறந்த நடிகர், நடிகை, ஒளிப்பதிவாளர், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

(கெவின் ஹார்ட்)

இந்த ஆண்டுக்கான விருது விழா, வரும் 24 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட்டின் மையமான, டால்பி தியேட்டரில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. 91 வது ஆஸ்கர் விருதுக்கான முழு பரிந்துரை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விழாவில் விருது வாங்குபவர்களைப் போல தொகுத்து வழங்குவர்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கினார். 

இந்த ஆண்டுக்கான விழாவை பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் கெவின் ஹார்ட் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப் பட்டது. இதற்கிடையில், ஓரினச் சேர்க்கையாளர் பற்றி அவர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கப்போவதில்லை என அவர் அறிவித்தார்.

இந் நிலையில், 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. ஆஸ்கர் வரலாற்றில் இது இரண்டாவது முறை.