சுரேஷ் சங்கையா முகநூல்
சினிமா

இளம் இயக்குநர் மறைவு... காலமானார் ’ஒரு கிடாயின் கருணை மனு’ இயக்குநர்!

சமீபத்தில் ஆகச்சிறந்த திரைத்துறை நடிகரான டெல்லி கணேஷ் மறைந்த நிலையில், தற்போது இயக்குநர் சுரேஷ் சங்கையாவும் உயிரிழந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ ஒரு கிடாயின் கருணைமனு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்தான் சுரேஷ் சங்கையா. இத்திரைப்படத்தில் இறைவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த கொண்டு செல்லப்படும் ஆட்டின் பார்வையிலிருந்து திரைப்படத்தை கொண்டு சென்று, ராஜபாளையம் , அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் வாழ்வியலை நகைச்சுவையாக வெளிப்படுத்தி இருப்பார். இதில் நடிகர் விதார்த்தும், அறிமுக நாயகி ரவீனா ரவியும் நடித்து இருந்தனர். 

அதே போல இவரது இரண்டாவது திரைப்படமான ’சத்திய சோதனை’ சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாக நல்லதொரு வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படங்கள் மட்டுமல்லாது.. காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றிவர். இவருக்கு திருமணமாகி 6 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, கல்லீரல் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..

தனது இரண்டு திரைப்படங்களின் மூலமாக, மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தி இருந்த சுரேஷ் சங்கையாவின் இழப்பு தமிழ்த்திரை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.