சினிமா

2022-ல் வெளியான படங்களில் டாப் 10 இதுதானாம்! தமிழ் படங்கள் எத்தனை தெரியுமா?

2022-ல் வெளியான படங்களில் டாப் 10 இதுதானாம்! தமிழ் படங்கள் எத்தனை தெரியுமா?

webteam

IMDb இந்தியா சார்பாக, 2022-ல் வெளிவந்த டாப் 10 புகழ்பெற்ற இந்திய திரைப்படங்களின் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. இதில் விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4வது மற்றும் 9வது இடம் கிடைத்துள்ளது.

1) RRR

எஸ்.எஸ்.ராஜமௌலியால் இயக்கப்பட்டு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த இத்திரைப்படம், இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய பெருமையினை சேர்த்துவருகிறது. Pan India படம் என்ற விளம்பரத்துடன் வெளியான இத்திரைப்படம் இப்பொழுது Pan world ஆக மாறி உள்ளது. மூன்று மணி நேரம் ஓடும் இப்படம் ஒரு இடத்திலும் சலிப்புத் தட்டாமல் சுவரஸ்யமாக கடத்தி சென்றதுக்கு முக்கிய காரணம் இப்படத்தின் எடிட்டிங், CG, VFX, SFX, sound design, art work, ஒளிப்பதிவு போன்றவை. சமீபத்தில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த பாடல்களாக உலகின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருதுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2) The Kashmir Files

மார்ச் மாதம் வெளிவந்து சர்ச்சைக்கு உள்ளான The kashmir files படம், காஷ்மீர் இந்துகளுக்கு உண்டான பயங்கரவாதத்தை சித்தரிக்கிறது. விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய இத்திரைப்படம் காஷ்மீர் பண்டிதர்களுக்கு நிகழ்த்தப்பட்ட வன்முறையினை மிகவும் உணர்ச்சிவயப்படும் வகையில் இயக்கப்பட்டிருந்தது. வெளிவந்த போது கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாளும், பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை இப்படம் ஈட்டியது. IMDb டாப் 10 புகழ்பெற்ற திரைப்படங்களில் இடம் பெற்ற ஒரே இந்தி திரைப்படம் The Kashmir files மட்டுமே. சமீபத்தில் IFFI Jury chief நடவ் லபிட் இப்பாடத்தை 'பிரச்சாரப்படம்' என்று விமர்சித்தார் அது மிகப்பெரிய சர்ச்சையினை ஏற்படுத்தியது.

3) K. G. F Chapter 2

K. G. F. Chapter 2, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் யாஷ் நடித்து பிரஷாந்த் நீல் இயக்கிய இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இந்தாண்டின் Box office ல் அதிக வசூல் ஈட்டிய படமாக திகழ்கிறது. கன்னட சினிமாவின் தரத்தை இந்திய அளவில் உயர்த்தி சென்ற பெருமை K. G. F chapter2 விற்கு உண்டு.

4) விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாஸில், சூர்யா இன்னும் பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற படம் விக்ரம். நான்கு வருடத்திற்கு பின் வெள்ளித்திரையில் வந்த உலக நாயகனுக்கு இத்திரைப்படம் வசூல்ரீதியாக மிகப்பெரிய Comeback ஆக அமைந்தது. லோகேஷ் கனகராஜ்ஜின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் -ற்கு அடித்தளமாக இத்திரைப்படம் அமைந்தது. அனிருத்தின் இசை மற்றும் கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு இப்படத்தை மற்றொரு கட்டத்திற்கு எடுத்து சென்றது என்றே சொல்லலாம்.



5) காந்தாரா

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி திடீர் என்று மக்களிடையில் பெரும் வெற்றியினை பெற்ற படம் கந்தாரா. இது ரிஷப் ஷேட்டி-ஆல் இயக்கி மற்றும் நடிகப்பட்டும் செப்டம்பர் மாதம் வெளிவந்தது. வெளிவந்த சில நாட்களில் திரையில் தீ பிடித்து பாக்ஸ் ஆபீசில் அமோக வசூலை ஈட்டியது. இந்த படத்திற்காக ரிஷப் ஷேட்டிக்கு விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பல பாராட்டுக்கள் குவிந்தது.

6) Rocketry : The Nambi Effect

இத்திரைப்படம் நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானியின் நிஜ வரலாறு ஆகும். இது மாதவனுக்கு இயக்குனராக முதல் படம். இயக்குவது மட்டும் இல்லாமல் இப்படத்தில் இவர் நடித்தும் உள்ளார். இதிரைப்படம் பல மொழிகளில் வெளியானது. ஆனால் முதலில் கான்னெஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது..

7) Major

2008 ஆம் ஆண்டு நிகழ்த மும்பை தாக்குதலை மையமாக வைத்து அதில் ஹீரோவாக திகழ்ந்து பல மக்களின் உயிரினை காப்பாற்றிய மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் என்பவரின் Bio-pic இந்த திரைப்படம். இதில் அடிவி செஷ் -ஆல் எழுதி மற்றும் நடிக்கபட்டு சஷி கிரண் டிக்கா - வால் இயக்கப்பட்டது. இப்படம் மும்பை பயங்கரவாதத்தை மட்டுமே பேசாமல் மாறாக அதில் மிகப்பெரிய தியாகத்தை செய்த சந்தீப் உன்னிகிருஷ்ணன் கடந்து வந்த வாழ்க்கையினை மிகவும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

8) Sita Raman

சமீப காலமாக லவ் மற்றும் ரொமான்டிக் கதைகளுக்கு எதிர்பார்ப்பு குறைந்த நிலையில் தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்ற 'சீதாராமன்', இந்தாண்டின் மிக சிறந்த ரொமான்டிக் திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் மீண்டும் லவ் மற்றும் ரொமான்டிக் கதைகளுக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் நடித்த இதிரைப்படம் தெலுங்கில் கிடைத்த வெற்றியினை தொடர்ந்து வேறு மொழிகளில் டப் செய்து நாடு முழுவதும் வெளியிட்டார்கள்.

9) பொன்னியின் செல்வன் - 1  

மணிரத்னம் இயக்கி விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி இன்னும் பல உச்சநட்சத்திரங்கள் நடித்து இசைப்புயல் எ. ஆர்.ரகுமான் இசையில் பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புத்தகத்தை தழுவி மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியினை இந்த திரைப்படம் பெற்றது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படமாக பொன்னியின் செல்வன் இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட உள்ள நிலையில் அப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

10) 777 charlie

மற்ற படங்கள் போல் அதீத screens கிடைக்காவிட்டாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது இப்படம். தர்மா என்ற நபர் தன்னுடைய தனிமையான வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு ஒரு குழப்பமான வாழ்க்கையினை வாழ்கிறான். அவன் வாழ்க்கையில் சார்லி என்ற நாய்க்குட்டி நுழைந்த பிறகு நிகழ்ந்த சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. Imdb டாப் 10 புகழ்மிக்க திரைப்பட பட்டியலில் இடம்பெற்ற மூன்றாவது கன்னட படம் இது.

- சுஹைல் பாஷா