சினிமா

பழைய கட்டணத்தில் சினிமா டிக்கெட்: வரியை ஏற்க மறுக்கும் திரையரங்குகள்

பழைய கட்டணத்தில் சினிமா டிக்கெட்: வரியை ஏற்க மறுக்கும் திரையரங்குகள்

webteam

புதிய கட்டணம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், திரையரங்குகளில் பழைய கட்டணத்திலேயே டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.

கடந்த சனிக்கிழமையன்று புதிய கட்டண நிர்ணயம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டது. அதில்‌ திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்கான கட்டணம் அதிகபட்‌மாக 150 ரூபாய் என்றும் குறைந்த பட்சமாக 15 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது தங்களுக்கு கட்டுபடியாகாது எனக்கூறி திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில், கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி புதிய திரைப்படங்கள் வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைத்திருக்கின்றனர். இந்நிலையில், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களும் தலைமைச் செயலகத்திற்கு சென்று இதுதொடர்பாக பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கையை அடுத்து திரைப்பட கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். திரைத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுதான் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், பிற‌ மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் திரைத்துறைக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.