நரூட்டோ  Twitter
சினிமா

2k கிட்ஸ் மட்டுமல்ல 90ஸ் கிட்ஸ்க்கும் புடிச்ச நரூட்டோ ! யார் இந்த நரூட்டோ ?

நரூட்டோ. உங்கள் அன்றாட வாழ்க்கையில், யாரோ ஒருவர் இந்த பெயரை உச்சரிப்பதை கேட்டிருப்பீர்கள்.2K கிட்ஸ் மத்தியில் மட்டுமின்றி 90ஸ் கிட்ஸ்சுக்கும் பிடித்தமான நபராக மாறியிருக்கும் நரூட்டோ யார் என பார்க்கலாமா?

PT WEB

மசாஷி கிஷிமோட்டோ (Masashi Kishimoto) என்கிற ஜப்பானிய மங்கா கலைஞர் தான் (Japanese manga artist) நரூட்டோவை அறிமுகம் செய்தவர்.

தொடக்க காலம் முதல் படம் வரைவதில் ஆர்வம் காட்டிய கிஷிமோட்டோ பல இன்னல்களுக்கு மத்தியில், தனது முதல் நரூட்டோ நாவலை 1997ல் வெளியிட்டார்.

Masashi Kishimoto

நரூட்டோ கதாபாத்திரங்களை மக்களுக்குக் கொண்டுபோய் சேர்ப்பதற்காகவே 15 வருட உழைப்பை செலுத்தியுள்ளார். புத்தக வடிவில் இருந்த நரூட்டோ மங்கா 1999 ஆம் ஆண்டுசெப்டம்பர் 21 ஆம் தேதி அனிமேவாக (anime) வெளியானது. நரூட்டோ மற்றும் நரூட்டோ ஷிப்புடன் என 720 எபிசோட்கள் வெளியாகி வெற்றி கண்டுள்ளது.

ஜப்பானில் கோனஹா என்கிற நிஞ்சா கிராமத்தில் வளரும் சிறுவன் உசுமாகி நரூட்டோ. அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட நரூட்டோ எப்படி அந்த கிராமத்தின் தலைவன் ஆகிறான் என்பது தான் இந்த அனிமேவின் கதை.

நரூட்டோவை சிறுவர்களுக்கானது என ஒதுக்க முடியாது.நரூட்டோவில் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்கள் ஏராளம் உள்ளன.

நரூட்டோ

இந்த அனிமேவின் நாயகன் நரூட்டோவாக இருக்கலாம்.. ஆனால் இது நரூட்டோவை பற்றிய கதை மட்டுமல்ல, அவனை உருவாக்கியவர்களின் கதை.ஜிராயா, காகாஷி, இருக்கா போன்ற ஆசிரியர்கள்தான் நருட்டோவை செதுக்கினார்கள். சகுரா, ஷிக்கமாரு, நெஜி போன்ற நண்பர்கள் தான் நரூட்டோவை தீய வழியில் செல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அனிமேவிற்கு உலகமெங்கும் பெரும் வரவேற்பு கிடைத்ததன் மூலம் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது..

நரூட்டோ

தன்னம்பிக்கை, கடுமையான உழைப்பு, நட்புக்கு மரியாதை, அடுத்தவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பது என்று நம்மை நெறிப்படுத்த தேவையானஅனைத்தையும் உள்ளடக்கிய நரூட்டோ தொடர் பலரின் ஃபேவரைட்டாக மாறியிருக்கிறது. உலகில் யாரும் தீயவர்கள் கிடையாது. இந்த சமூகம் தான் ஒருவரை தீயவர்களாக மாற்றுகிறது. நல்ல நண்பர்களை சம்பாதித்தால் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நரூட்டோ தான்.

- உதய், அருண்குமரன்.