சினிமா

திருமண வாழ்க்கை சிறந்ததா, இல்லையா? தபு விளக்கம்

திருமண வாழ்க்கை சிறந்ததா, இல்லையா? தபு விளக்கம்

webteam

பிரபல இந்தி நடிகை தபு. இவர், தமிழில், ’காதல் தேசம்’, ’இருவர்’, ’தாயின் மணிக்கொடி’, ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ உட்பட சில படங்களில் நடித்திருந்தார். தபுவுக்கு இப்போது 46 வயது ஆகிறது. 90-களில் தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனாவுடன் கிசுகிசுக்கப்பட்டார் தபு. ஹிட் ஜோடி என்று வர்ணிக்கப்பட்ட இவர்கள், பின்னர் ‘நாங்கள் நண்பர்கள்தான்’ என்று தெரிவித்தனர். அவர்களின் நட்பு இப்போதும் தொடர்கிறது. பின்னர் சில ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்பட்ட தபு, யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் டெல்லியில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட தபு திருமணம் குறித்து பேசினார். 

அவர் கூறும்போது, ‘நான் இப்போதும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகத்தான் இருக்கிறேன். இப்படி இருப்பதால் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். திருமணம் செய்துகொண்டு வாழ்வது சிறப்பானதா, தனியாக இருப்பது நல்லதா என்று கேட்கிறார்கள். எனக்கு ஒரு பகுதி மட்டுமே தெரியும். அதாவது திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது. இன்னொரு பகுதி தெரியாது. அதனால் இந்தக் கேள்விக்கு எப்படி என்னால் பதில் சொல்ல முடியும்? எனக்கு அந்த அனுபவம் இருந்தால் திருமணம் சிறந்ததா, திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது சிறந்ததா என்பதை சொல்லியிருப்பேன்’ என்றார்.