சினிமா

நந்திதாவின் ’ஐபிசி 376’ பாலியல் வன்கொடுமைக்கு எதிரான படமா?

நந்திதாவின் ’ஐபிசி 376’ பாலியல் வன்கொடுமைக்கு எதிரான படமா?

webteam

நந்திதா ஸ்வேதா நடிக்கும் ’ஐபிசி 376’ பாலியல் வன்கொடுமைக்கு எதிரான படம் தான் என்று அதன் இயக்குனர் ராம்குமார் சுப்பாராமன் தெரிவித்தார். 

தமிழில், அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட சில படங்களில் நடித்த வர் நந்திதா ஸ்வேதா. இவர் இப்போது நடிக்கும் படத்துக்கு, `ஐபிசி 376' என்று டைட்டில் வைத்துள்ளனர். இது, பாலியல் வன்கொடுமைக்கு எதிரா ன சட்டம்.

இந்தப் படத்தை ராம்குமார் சுப்பாராமன் இயக்குகிறார். இவர், இயக்குனர்கள் பிரபு சாலமன், பாலசேகரன் ஆகியோர்களிடம் இணை இயக்குந ராகப் பணிபுரிந்தவர். இந்தப் படத்தில் நந்திதா ஸ்வேதா இரண்டு லுக்-கில் வருகிறார். அதில் ஒன்று போலீஸ் அதிகாரி. ஆக்‌ஷன் கலந்த த்ரில் லர் படமாக உருவாகும் இதில், அவருக்கு ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கிறது. சூப்பர் சுப்பராயன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் மகாநதி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பவர் கிங் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.பிரபாகர் தயாரிக்கிறார். 

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் பற்றி இயக்குனர் ராம்குமார் சுப்பாராமன் கூறும்போது, ’’ பெண்களை இழிவுபடுத்தி வந்துகொண்டிரு க்கும் படங்களுக்கு மத்தியில், இது பெண்களின் பெருமை பேசும் படமாக இருக்கும். த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதை தாண்டி யூகிக்க முடியாத மற்றொரு விஷயமும் படத்தில் இருக்கும். பாலியல் வன்கொடுமைக்கு எதிரான படம் தான் இது.

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான தண்டனை சட்டம், `ஐபிசி 376'. இந்தப் படம் வெளியான பிறகு பெண்கள் வரவேற்பார்கள். பெண்கள் கொண் டாடும் படமாக, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தப் படம் இருக்கும். பொள்ளாச்சி சம்பவத்துக்குப் பிறகு பெண்கள் பாது காப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றிய பேச்சுகள் அதிகரித்திருக்கிறது. இந்தப் படமும் அப்படியொரு விழிப்புணர்வை பெண்களுக்கு கொடுக்கும்’’ என்றார்.