”என்னுடைய ஃபேவரைட் தமிழ் நடிகர் விஜய்தான் ” என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார் நடிகை ராஷிகண்ணா.
கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்த ’அந்தாதூன்’ மலையாள ரீமேக்கான ’பிரம்மம்’ வரும் அக்டோபர் 7 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. படத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாக நடிகை ராஷிகண்ணா நடித்திருக்கிறார். அதோடு, தமிழில் ராஷி கண்ணா நடிப்பில் விரைவில் ‘அரண்மனை 3’ வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதிலில் கலந்துகொண்ட ராஷிகண்ணாவிடம் பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் கேட்டனர்.
அதில், ஒரு ரசிகர் ”பிடித்த தமிழ் நடிகர் யார்?” என்று கேட்டதற்கு, “தமிழில் எனக்கு விஜய் சார், நடிகைகளில் நயன்தாரா மேம் தான் பிடிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல, மலையாளத்தில் பிடித்தப்படம் ‘கும்பளங்கி நைட்ஸ்’ என்றும் பிடித்த நடிகர் ‘ஃபகத் ஃபாசில்’ என்றும் தெரிவித்திருக்கிறார் ராஷிகண்ணா.