மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ‘லூசிபர்’ தெலுங்கு ரீமேக் படத்தின் பாடல் படமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளதை அறிவித்திருக்கிறார், அப்படத்தின் இசையமைப்பாளர் தமன்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான ‘லூசிபர்’ படம், மலையாள சினிமாவில் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானதோடு வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. மோகன்லால், விவேக் ஒபாராய், மஞ்சு வாரியார், ஸ்டைலிஷ் அரசியல்வாதியாக டொவினோ தாமஸ் உட்பட பலர் போட்டிப்போட்டு நடித்து பாராட்டுக்களை குவித்தனர். அரசியல்வாதி மறைவுக்குப் பிறகு மருமகனுக்கும் அவரது வளர்ப்பு மகனுக்கும் ஏற்படும் மோதலை சுவாரசியமான திரைக்கதை மூலம் பல ட்விஸ்டுகளால் காட்சிப்படுத்தி ரசிக்கவைத்தார் பிரித்விராஜ்.
இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். சிரஞ்சீவி மோகன்லால் கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இன்றுமுதல் இசைப்பணிகள் தொடங்குவதாக இயக்குநர் மோகன் ராஜாவுடன் இசையமைப்பாளர் தமன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்திருக்க்க்றார்.