சினிமா

மேஜர் சந்தீப் உண்ணிகிருஷ்ணன் வாழ்க்கை படமாகிறது!

மேஜர் சந்தீப் உண்ணிகிருஷ்ணன் வாழ்க்கை படமாகிறது!

webteam

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மேஜர் சந்தீப் உண்ணி கிருஷ்ணனின் வாழ்க்கை சினிமாவாகிறது. இதை தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு தயாரிக்கிறார். 

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் போது, தன் உயிரைத் தியா கம் செய்தவர், தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோ, மேஜர் சந்தீப் உண்ணி கிருஷ்ணன்.

இவர் வாழ்க்கை கதை தெலுங்கு, இந்தி மொழிகளில் படமாக உருவாகிறது. இப்படத்துக்கு 'மேஜர்' எனப் பெயரிட்டுள்ளனர்.  மேஜர் சந்தீப் வேடத்தில் இளம் நடிகர் அத்வி சேஷ் நடிக்கிறார். சசிகிரண் டிக்கா இயக்குகிறார். இவர் ’கூடாசரி’ என்ற படத்தை இயக்கியவர். 

இந்தப் படத்தை தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவின், ’மகேஷ்பாபு என்டர்டெயின்மென்ட்’ தயாரிக்கிறது. சோனி பிக்சர்ஸ் இணை தயாரிப்பு செய் கிறது. படப்பிடிப்பை 2019 தொடங்கி 2020-ல் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். 

(அத்வி சேஷ்)

நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியும் மகேஷ்பாபு என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான நர்மதா கூறும்போது, ‘’தேசிய ஹீரோ ஒருவரின் வாழ்க்கை கதையை படமாக எடுப்பதில் பெருமை படுகிறோம். இதை தயாரிக்க சோனி பிக்சர்ஸ் சரியான பார்ட்னரை தேர்ந் தெடுத்திருப்பதில் மகிழ்ச்சி. இது இந்திய படம் மட்டுமல்ல, சர்வதேச படமாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.