Animal movie Twitter
திரை விமர்சனம்

Animal Review | தந்தையின் மீது அதீத பாசம் வைத்திருக்கும் மகனைப் பற்றியதே `அனிமல்’

படம் மிகவும் வன்முறையான, ரத்தக்களரியான படம். அதற்காகவும் சில அடல்ட் கண்டட்காகவும் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. படம் கண்டிப்பாக குழந்தைகளுக்கானது அல்ல. And this is gory, violent, bloodshed movie. certified with A. keep that in mind

Johnson

பல்பீர் சிங் (அனில் கபூர்) பெரிய ஸ்டீல் ஃபேக்டரி ஓனர், மிகப்பெரிய பணக்காரர், செல்வாக்குமிக்கவர். அவரின் மகன் ரன்விஜய் சிங் (ரன்பீர் கபூர்), தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஆனால் தன் மகன் மிக வன்முறையாளனாக இருக்கிறான் என்பதால் அவனிடம் கடுமையாகவே இருக்கிறார் பல்பீர். இவர்களின் உறவு இப்படியே சில ஆண்டுகள் கடக்கிறது. அதன் பின் எதிரிகளால் பல்பீர் மீது தாக்குதல் நடத்தப்பட, வெறியாகிறார் மகன் ரன்விஜய். தந்தையை கொல்ல முயற்சிப்பது யார்? எனத் தேடி மிருகம் போல அலைகிறார். அதன் பின் நடப்பவை என்ன என்பதே கதை.

Animal movie

இயக்குநர் சந்தீப் வங்கா மிக வன்முறையான படத்தை எடுத்திருக்கிறார். ரன்விஜய் எமோஷனலாக பாதிக்கப்பட்டவர், அதனால் அவர் வெளியே ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன எனக் கதை நகர்கிறது.

அர்ஜூன் ரெட்டி போல ரன்விஜயும் ஒரு ஆல்ஃபாதான்.

தன்னுடைய வாழ்வில் நடப்பவை எல்லாம் தான் தீர்மானித்ததாக இருக்க வேண்டும் என வாழ்கிறார். அவரது திருமணம், பழிக்கு பழி எனக் கிளம்புவது, இவ்வளவு ஏன் ஒரு இடத்தில் Happiness is a decision என்பார். அப்படி எல்லாத்தையும் தீர்மானித்தபடி நடத்துபவருக்கு ஒரு விஷயம் மட்டும் கிடைக்கவில்லை. அது அவரது தந்தையின் பாசம், அங்கீகாரம். அது அவரை ஒரு மிருகமாக்குகிறது. கூடவே புராணக் கதையான மகாபாரதம் போல சகோதர யுத்தத்தை கதைக்குள் கொண்டு வந்திருந்ததும் சிறப்பு.

நடிகர்கள் ரன்பீரின் நடிப்பு அட்டகாசம். தனது கோவத்தை வெளிப்படுத்துவது, aggression, wild எனப் பல பரிமாணங்களை காட்டுகிறார். மனைவியிடம் வந்து பேசும் ஒரு காட்சியிலும் நல்ல நடிப்பைக் கொடுத்திருந்தார். ராஷ்மிகாவுக்கு முக்கியமான கதாபாத்திரம், சில முக்கியமான காட்சிகளில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். மகனின் நடவடிக்கைகளுக்கு தானே காரணம் என குற்றவுணர்வுக்குள்ளாகும் போதும் சரி, மகனை மிரட்டிம் போதும் சரி அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அனில் கபூர். பாபி தியோலும் படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். சிறிய கதாப்பாத்தில் வரும் ட்ரிப்தி இம்ரியும் கவனிக்க வைக்கிறார்.

Animal movie

படத்தின் குறைகள் எனப் பார்த்தால், இந்தப் படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் ஓடுகிறது.

படத்தின் நீளம் எந்த இடத்தில் பிரச்சனையாக மாறுகிறது என்றால், படத்தின் பல காட்சிகள் எந்த அழுத்தமும் இல்லாமல் நகர்கிறது. அதனால் அதைப் பார்க்கும் போது அலுப்பு ஏற்படுகிறது. படத்தின் எடிட்டரும் சந்தீப் வங்கா தான். அவரின் எடிட் பேர்டன் படத்தை குழைக்கிறது. ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு செல்லும் இடங்கள் எல்லாம் பல நேரம் ரசிக்கும்படி இல்லை.

மேலும் இது அதிகப்படியான வசனங்கள் கொண்ட படமாகவும் இருக்கிறது. ஒரு கட்டத்தில் ஏதோ ஒலிச்சித்திரம் பார்ப்பதைப் போன்ற எண்ணம் எழுகிறது. படம் நிறைய உறவுகளைப் பற்றி பேசுகிறது. கணவன் - மனைவி, தந்தை - மகன், சகோதரர்களுக்குள் நடக்கும் சண்டை. ஆனால் இவை எதுவுமே பார்வையாளர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. வழக்கம் போல் சந்தீப்பின் misogynic trop இதிலும் உண்டு. அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் கூட படம் அத்தனை சுவாரஸ்யமாக இல்லை.

Animal movie

மொத்தத்தில் படம் எப்படி என்று யோசித்தால், அர்ஜூன் ரெட்டியின் அப்கிரேட் வெர்ஷனை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் அதன் டோஸேஜ் மிகவும் அதிகமாகி படத்தை ஒரு half cooked ஆக மாற்றியிருக்கிறது.

இந்தப் படம் பார்க்கும் திட்டத்தில் இருப்பவர்களுக்கு இரண்டு அலர்ட்ஸ்:

மூன்றரை மணிநேரம் படம் பார்த்த களைப்பில் படத்தின் எண்ட் கிரடிட் ஓடும் போது படம் முடிந்துவிட்டது எனக் கிளம்ப வேண்டாம். அதற்குப் பிறகு ஒரு அனிமல் பார்க் சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் இயக்குநர்.

Animal movie

படம் மிகவும் வன்முறையான, ரத்த களரியான படம். அதற்காகவும் சில அடல்ட் கண்டட்காகவும் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே அதை கவனத்தில் கொள்ளுங்கள்.

படம் கண்டிப்பாக குழந்தைகளுக்கானது அல்ல.

And this is gory, violent, bloodshed movie. certified with A. keep that in mind