சினிமா

குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள்: நடிகை த்ரிஷா கவலை!

webteam

குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் அதிக கவலை அளிப்பதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷா, யோகி பாபு, முகேஷ் திவாரி, ஜாக்கி பக்னானி, பூர்ணிமா பாக்யராஜ், மதுமிதாஉட்பட பலர் நடித்துள்ள ஹாரர் படம், ‘மோகினி’. ஆர்.மாதேஷ் இயக்கியுள்ளார். ’சிங்கம் 2’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்‌ஷ்மண் குமார் தயாரித்துள்ளார். 

படம் பற்றி த்ரிஷா கூறும்போது, ‘இந்தப் படத்தில் மோகினி மற்றும் வைஷ்ணவி என்ற இரண்டு கேரக்டரில் நடித்திருக்கிறேன். முதன் முதலில் நடித்துள்ள இரட்டை வேடம் இதுதான். தினமும் காலை எழுந்து செய்திதாளை படித்தால் அதில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றிதான் அதிகமாக செய்திகள் வருகிறது. அதைப் படிக்கும் போது வருத்தமாக உள்ளது. இந்தப் படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம். இதில் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் நிறைய விஷயங்கள் உள்ளது. லண்டன், பாங்காக் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளோம்’ என்றார்.

இயக்குனர் மாதேஷ் கூறும்போது, ’ இந்த படத்தை பிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம்.  த்ரிஷா சிறப்பாக நடித்துள்ளார். அவர்  நினைத்திருந்தால் கமர்சியல் கேரக்டரில் நடித்திருக்கலாம். ரொமான்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாகச் சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இந்த படம் ஹாரர் படமாக இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது. படத்தில் எபி ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது. டிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள்தான் படத்தின் முக்கியமான விஷயம். இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டது. இப்படம் தமிழகத்தில் வெளியாவது போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் த்ரிஷா நிறைய சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார். சோட்டானிக்கரை கோவிலில் நாங்கள் கண்ட உண்மையான விஷயங்களை கிளைமாக்ஸ் காட்சியாக உருவாக்கியுள்ளோம்’ என்றார்.