சினிமா

மோகன்லால் - பிரித்விராஜின் ‘ப்ரோடேடி’: ஹைதராபாத்தில் தொடங்கிய படப்பிடிப்பு

மோகன்லால் - பிரித்விராஜின் ‘ப்ரோடேடி’: ஹைதராபாத்தில் தொடங்கிய படப்பிடிப்பு

sharpana

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ப்ரோ டேடி’ படத்தின் பூஜையுடன் இன்று படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

சமீபத்தில், நடிகர் பிரித்விராஜ் இரண்டாவதாக இயக்கும் ‘ப்ரோ டேடி’ படத்தின் அறிவிப்பு வெளியானது. இரண்டாவது முறையும் மோகன்லாலுடன் இணைந்த பிரித்விராஜ் ’நகைச்சுவைக் கொண்ட குடும்பப்படம் இது. உங்களை திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கும்’ என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. நடிகை கல்யாணி பிரியதர்ஷனுடன் செம்ம்ம ஸ்டைலிஷ் லுக்கில் புல்லட்டில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், பிரித்விராஜ். நடிகர் மோகன்லாலும் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ படத்தின்மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார் பிரித்விராஜ். அவரின், முதல் படமே கேரள சினிமா வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஒன்றானது. ஸ்டைலிஷ் அரசியல் சஸ்பென்ஸ் கதையைக் கொண்ட, இப்படத்தில் மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், விவேக் ஒபாராய் உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள்.

இதனைத்தொடர்ந்து, பிரித்விராஜ் இயக்கத்தில் அடுத்தப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். ஆனால், படம் இயக்காமல் ’அய்யப்பனும் கோஷியும்’, ’கோல்ட் கேஸ்’ உள்ளிட்டப் படங்களில் நடித்தார். இந்நிலையில், தான் இயக்கும் இரண்டாவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் பிரித்விராஜ்.