சினிமா

பார்கின்சன் நோயை 26 ஆண்டுகளாக எதிர்த்துப் போரிடும் நடிகர்

webteam

பார்கின்சன் நோய் எனும் நடுக்குவாதத்தை எதிர்த்து 26 ஆண்டுகளாகப் போரிடும் அமெரிக்க நடிகர் மைக்கேல் ஜே பாக்ஸ், தனது மனைவியுடன் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.

பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இயக்கம் குறைந்து, ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்துக்கு செல்ல மற்றவர்களின் உதவி தேவைப்படும். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்படும். ஆனால், அமெரிக்க டிவி தொடர்களில் நடித்து வரும் மைக்கேல் ஜே.பாக்ஸ், பார்க்கின்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறார். இவருக்கு பார்கின்சன் நோய் இருப்பது கடந்த 1991ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதுமுதல் கடந்த 26 ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுக்கொண்டு பார்கின்சன் நோயை எதிர்த்து தீரமாகப் போரிட்டு வருகிறார் பாக்ஸ். மேலும், பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியிலான உதவிகள் கிடைக்க வழக்கறிஞராகவும் மைக்கேல் ஜே.பாக்ஸ் உதவி வருகிறார்.