சினிமா

ஒரேநாளில் வெளியாகும் Oppenheimer - Barbie படங்கள்... இப்போதே தொடங்கிய மீம்ஸ் போர்!

ஒரேநாளில் வெளியாகும் Oppenheimer - Barbie படங்கள்... இப்போதே தொடங்கிய மீம்ஸ் போர்!

webteam

சமீபத்தில் Greta Gerwig இயக்கத்தில் பார்பி (Barbie) திரைப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ள Oppenheimer படத்தின் ட்ரைலரும் நேற்று வெளிவந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜூலை 21 ஆம் நாள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரு படமுமே ஒரேநாளில் வெளியாக உள்ளதால், ரசிகர்களிடையே இப்போதிருந்தே memes போர் தொடங்கி உள்ளது.

Barbie ட்ரைலரில், மிக புகழ்மிக்க இயக்குனரான Stanley kubrick-யின் பழைய திரைப்படமான `2001: A Space odyessey’ படத்தின் முதல் காட்சி வேறுவிதமாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன் Greta Gerwig இயக்கிய Lady bird மற்றும் Little women ஆகிய இரண்டு படங்களும் சினமா உலகின் மிக முக்கியமான படங்களாக திகழ்கிறது. அப்படங்களின் எதிர்பார்ப்பும், பார்பி மீதும் தற்போது விழுந்துள்ளது. பார்பி படத்தில் Margot Robbie, Ryan Gosling இன்னும் பல நட்சதிரங்கள் நடித்துள்ளதால் எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது. 

இந்நிலையில் அதே நாளில் வெளியாக உள்ள Oppenheimer படம், கிரிஸ்டோஃபர் நோலனால் (Christopher Nolan) இயக்கப்பட்டுள்ளது. இவர் The Dark Knight, Inception, Intersteller உட்பட பல பிரம்மாண்ட படங்களை இயக்கி, சினிமா உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருப்பவர். இந்நிலையில் நோலனின் இந்த புதிய படம், இரண்டாம் உலகப்போர் மத்தியில் Manhattan-ல் நிகழ்ந்த அணு ஆயுத சோதனை நிகழ்வுக்கு முக்கிய காரணமாக இருந்த Oppenheimer என்ற விஞ்ஞானி பற்றியது. இதற்கு முன் நோலன் இயக்கிய Tenent படத்தில் விமான விபத்தை எந்த ஒரு CGI யும் இல்லாமல் நிஜமாக ஒரு விமானத்தை வெடிக்கவைத்து சினிமா உலகையே ஆச்சர்யப்பட வைத்திருந்தார் அவர். இப்பொழுது இப்படத்திலும், அணு குண்டு வீச்சினை எந்த ஒரு CGI யும் இல்லாமல் எடுத்து உள்ளார் என்று தகவல் கசிந்து உள்ளது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் எகிறவைத்துள்ளது. மேலும் இப்படத்தில் Cillian Murphy, Robert Dowrey, Florence Pugh, Rami Malek போன்ற மிக முக்கிய சினிமா நட்சதிரங்கள் நடித்துள்ளது எதிர்ப்பார்ப்பை உச்சத்தில் உயர்த்தி உள்ளது.

Barbie மற்றும் Oppenheimer ஆகிய இருப்படங்களும் வெவ்வேறு தொனி மற்றும் கதைகளங்களை கொண்டது. இருப்பினும் ஒரேநாளில் இருபடமும் ரிலீஸ் ஆக உள்ளதால், தற்போது இனையத்தில் இரு படங்களும் மீம் கிரியேட்டர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதனால் இரு படங்களுக்குமே, இப்போதிருந்தே Memes-கள் குவிந்து வருகின்றன. Team Barbie - Team Oppenhaimer என்று போட்டி ஆரம்பமாகி உள்ளது. அடுத்து வருடம் மோத உள்ள மிக முக்கிய படங்களாக இவ்விருப்படங்களும் இருக்கின்றன.

-சுஹைல் பாஷா