சினிமா

மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி

Sinekadhara

மாஸ்டர் திரைப்படத்தின் சில நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை பல வெளிநாடுகளிலும் திரையிடவுள்ளதாக அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேர காட்சிகள் சிறிது சிறிதாக இணையத்தில் வெளியாகி உள்ளதால் காட்சிகளை நீக்கும் பணியில் படக்குழுவினர் தீவிரம் காட்டிவருகின்றனர். குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார், லீக் ஆன மாஸ்டர் பட காட்சிகளை யாரும் பகிரவேண்டாம் என இணையம் வாயிலாக கோரிக்கை வைத்திருக்கிறார்.