சினிமா

திரைப்படமான ’மெரினா புரட்சி’ ஜல்லிக்கட்டு போராட்டம்

திரைப்படமான ’மெரினா புரட்சி’ ஜல்லிக்கட்டு போராட்டம்

rajakannan

ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாகக் கொண்டு இயக்குநர் பாண்டிராஜின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் "மெரினா புரட்சி" என்ற படத்தின் பஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.  

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றாலும் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டதால் இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. உலகம் முழுவதும் உள்ள தமிழகர்களும் அந்தந்த நாடுகளில் போராட்டங்களை நடத்தி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். 

'வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம் ' என்று மாணவர்கள், இளைஞர்கள் முழு வீச்சில் போராடியாதால் ஜல்லிக்கட்டு நடத்தவும் அனுமதி கிடைத்தது. போராட்டம் மிகவும் அமைதியாக நடைபெற்ற போதும் இறுதி நாளில் வன்முறை ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களைக் களைத்தனர். மிகப்பெரிய போராட்டத்திற்கு இது சிறு களங்கமாக மாறியது

இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜின் பசங்க தயாரிப்பு நிறுவனம் ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளது. மெரினா புரட்சிப் படத்தை எம்.எஸ்.ராஜ் எழுதி இயக்குகிறார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அல்சூஃபியான் இசை அமைத்திருக்கிறார். 

இந்தப் படத்திற்கான பஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ் மற்றும் சூரி மூவரும் ஒரே நேரத்தில் தங்கது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளனர். படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.