சினிமா

சிவகார்த்திகேயனின் கல்லூரி நினைவுகளைக் கிளறிய 'மரகத நாணயம்'

சிவகார்த்திகேயனின் கல்லூரி நினைவுகளைக் கிளறிய 'மரகத நாணயம்'

webteam

ஆதி, நிக்கி கல்ராணி நடித்திருக்கும் ‘மரகத நாணயம்’படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள மரகத நாணயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் ராம்குமார், இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் நாயகன் ஆதி, நாயகி நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனீஸ் காந்த், அருண்ராஜா காமராஜ், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ், பாடலாசிரியர்கள் முத்தமிழ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், நான், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ், அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பறையில் படித்தவர்கள் என்றார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனும், பாடலாசிரியர் முத்தமிழும் எங்களுக்கு சீனியர்கள். கல்லூரி காலத்திற்கு பிறகு நாங்கள் ஐந்து பேரும் ஒன்றாக சந்திப்பது இந்த மரகத நாணயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான். இத்தகைய வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் டில்லிபாபு சாருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். நிச்சயமாக திபு நைனன் தாமஸ், இசை துறையில் பெரிய வளர்ச்சியை காண்பார். அதற்கு இந்த மரகத நாணயம் தான் சிறந்த அடித்தளம் என்று சிவகாரத்திகேயன் கூறினார்.