Manjummel Boys pt desk
சினிமா

Manjummel Boys: தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு - ரூ.200 கோடியை கடந்து வசூல் சாதனை

Manjummel Boys மலையாள திரைப்படம் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ரூ.200 கோடியை கடந்து வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

webteam

இயக்குநர் சிதம்பரம் இயக்கி ஸ்ரீநாத் பாசி, சௌபின் ஷாஹிர், கணபதி, பாலு வர்கீஸ், ஜீன் பால் லால ஆகியோர் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள Manjummel Boys படத்திற்கு மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழக குடும்பங்களும் இந்தப் படத்தை கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.

Manjummel Boys

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள ‘டெவில்ஸ் கிச்சன்’ எனப்படும் குணா குகையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் Manjummel Boys. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு, அரங்கம் முழுவதும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி வசூலில் பல சாதனைகளை படைத்துள்ளது.

‘Manjummel Boys’ திரைப்படம் மலையாள சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. அந்தவகையில் இத்திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூட் அந்தனி ஜோசப் நடிப்பில் வெளிவந்த '2018' திரைப்படம் ரூ175 கோடியுடன் முதல் இடத்தில் இருந்த நிலையில், அந்த சாதனையை Manjummel Boys படம் முறியடித்துள்ளது. 2016-ம் ஆண்டு வெளியான மோகன்லாலின் புலிமுருகன் திரைப்படம் ஈட்டிய 139 கோடி ரூபாய் வசூலையும் முறியடித்துள்ளது.

Manjummel Boys

‘பல கோடிகளை செலவு செய்து பிரபல நட்சத்திரங்களை வைத்து பிரம்மாண்டமாக எடுக்கப்படும் படங்கள்தான் வசூலை வாரிக் குவிக்கும் என்ற காலம் மலையேறி விட்டது’ என ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். அதுசரி... சினிமாவுக்கும் ரசிகர்களுக்குமான காதல் என்பது மனிதர் உணர்ந்த கொள்ள மனிதக்காதல் இல்லையே!