புற்றுநோயாலிருந்து மீண்ட நடிகை மனிஷா கொய்ராலா, சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், தான் புற்றுநோயால பாதிக்கப்பட்டிருந்தபோது என் குடும்பத்தை தவிர என்னுடன் யாரும் இல்லை என்று வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
1991 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான சவுதாஹர் என்ற படத்தின் மூலம் நேபாள நடிகையான மனிஷா கொய்ராலா இந்திய சினிமாவில் அறிமுகமானார். மேலும், பம்பாய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா உள்ளிட்ட திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனது நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அமெரிக்காவிற்கு சென்று தொடர் சிகிச்சை பெற்று வந்த மனிஷா, சமீபத்தில் நெட்க்பிள்க்ஸ் சீரீஸ் Heeramandi மூலம் அதிரடி கம்பேக்கை கொடுத்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஆங்கில நிறுவனம் ஒன்றிக்கு பேட்டியளித்துள்ள நடிகை மனிஷா கொய்ராலா, தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது என் குடும்பத்தை தவிர என்னுடன் யாருமே இல்லை என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், ”நமது ஆரோக்கியம் என்பது நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஆகவே, அனைவரும் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனக்கு நிறைய உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் நன்கு வசதி படைத்தவர்கள். ஆனால், எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டபோது, என்னுடம் யாரும் இல்லை. அனைவரும் விலகிவிட்டார்கள்.
என் நண்பர்களும் என்னுடன் இல்லை. அச்சமயத்தில் என்னுடம் இருந்தது, என் பெற்றோர், என் சகோதரர், சகோதரிகள் மட்டுமே.புற்றுநோயால பாதிக்கப்பட்ட போது பல விஷயங்கள் எனக்கு நடந்தது. நோய் பாதிப்புக்கு முன்பு இருந்த போல, இப்போது என் உடல் இல்லை. என்னால் இப்போது எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. இப்போதும் நான் மன அழுத்தத்தோடுதான் இருக்கிறேன், அதே வலியோடுதான் என் வேலைகளை செய்கிறேன்" என்று மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.