சினிமா

என் விவாகரத்துக்கு நானே காரணம்: மனம் திறந்த மனிஷா

என் விவாகரத்துக்கு நானே காரணம்: மனம் திறந்த மனிஷா

Rasus

என் திருமண வாழ்க்கை முறிந்ததற்கும், விவாகரத்துக்கும் நானே காரணம். வேறு யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை என்று பிரபல பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா கூறியுள்ளார்.

நடிகை மனிஷா கொய்ராலாவுக்கும், நேபாள தொழில் அதிபர் சாம்ராட் தஹாலுக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு காத்மண்டுவில் திருமணம் நடந்தது. ஆனால் 2012 ஆம் ஆண்டு அவர்கள் திருமண வாழ்க்கை முறிந்து, விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இதுபற்றி மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா, “திருமணம் பற்றி ஏதேதோ கனவு கண்டேன். ஆனால் எங்கள் உறவு மோசமான நிலையில் இருந்தது. எனவே, திருமண பந்தத்தில் இருந்து வெளியேறுவது முடிவு செய்தேன். விவாகரத்து ஆனாதில் எந்த வருத்தமும் இல்லை. அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு இது எனக்கு ஒத்து வராது என்பதை புரிந்து கொண்டேன். எனவே, பிரிந்துவிட்டேன். இதில் வேறு யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. இதற்கு நானே முழு பொறுப்பையும் ஏற்கிறேன். இது என்னுடைய தவறுதான். என் வாழ்க்கை, என் வேலை நிம்மதியாக இருக்கிறது. இப்படியே வாழ்ந்து விட நினைக்கிறேன். இனி என் வாழ்வில் காதல் வரும் என்று நினைக்கவில்லை. நான் புற்று நோயுடன் போராடிய போது எனக்கு நெருக்கமானவர்கள் கூட என்னை கண்டு கொள்ளவில்லை. நோயுடன் நான் போராடியதைப் பார்க்க விரும்பாததால் அவர்கள் வரவில்லை என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.