சினிமா

உலகின் உயரமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ‘நவரசா’ நடிகர்களின் விளம்பரம்

உலகின் உயரமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ‘நவரசா’ நடிகர்களின் விளம்பரம்

sharpana

மணிரத்னத்தின் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தின் விளம்பரத்தை உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் இடம்பெறச் செய்துள்ளது படக்குழு.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் ஆந்தாலஜி படமான ‘நவரசா’ ஒன்பது குறும்படங்களை உள்ளடக்கியது. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று 12.30 மணிக்கு வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள ’நவரசா’ நாயகர்களின் விளம்பத்தை துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் இடம்பெறச் செய்துள்ளது படக்குழு. 163 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிஃபா 828 மீட்டர் நீளம் கொண்டது.

இந்தக் கட்டிடத்தில், சூர்யா,விஜய் சேதுபதி, ரேவதி,கெளதம் மேனன்,பிரகாஷ் ராஜ், பிரசன்னா உள்ளிட்டோரின் புகைப்படங்களோடு ’நவரசா’வை விளம்பரப்படுத்தியுள்ளது. தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படம் வெளியானபோது அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் ’ஜகமே தந்திரம்’படத்தை படக்குழு விளம்பரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.