கார்த்திக் நரேனுடன் தனுஷ் இணையும் D-43 படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களையடுத்து நடிகர் தனுஷ் கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் கர்ணன் படத்தை பரியேரும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜூம், ஜகமே தந்திரம் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூம் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று ஜகமே தந்திரம் படத்தின் இராண்டாவது போஸ்டரையும், கதாபாத்திரத்தின் பெயரான சுருளியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் கார்த்திக் நரேனுடன் தனுஷ் இணையும் புதிய படமான D-43 படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் இசையமைப்பளாராக ஜிவி பிரகாஷ் குமார் பணியாற்றி வருகிறார். நடிகர் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்தில் மலையாள எழுத்தாளர்களான ஷார்பு மற்றும் சுகாஸ் ( Sharfu and Suhas)ஆகியோர் பணிபுரிய உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் முன்னதாக ஃபஹத் பாசில் நடிப்பில் உருவான வரதன் படத்திலும், 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான வைரஸ் படத்திலும் இணைந்து பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரில்லர் ஜானராக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.