கேரள நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவனிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தினர்.
கேரளாவில் நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யாமாதவனிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அலுவாவில் உள்ள திலீப்பின் வீட்டில் வைத்து காவ்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரின் கடந்த கால செயல்பாடுகள் பற்றி காவல்துறையினர் கேள்விகள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே நடிகர் திலீப்பை வரும் 8 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி உள்ள பல்சர்சுனில் உள்ளிட்டோருக்கு நடிகை காவ்யா மாதவன் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.