சினிமா

பொங்கல் ரேஸில் இருந்து ‘மதுர வீரன்’ பின் வாங்கியது ஏன்?

பொங்கல் ரேஸில் இருந்து ‘மதுர வீரன்’ பின் வாங்கியது ஏன்?

webteam

பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்த விஜயகாந்தின் மகனின்’மதுர வீரன்’ படம், பின் வாங்கியுள்ளது. 

’சகாப்தம்’ படத்துக்குப் பிறகு விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடித்துள்ள படம் ‘மதுரவீரன்’. புதுமுகம் மீனாட்சி, சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, பால சரவணன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார் பி.ஜி.முத்தையா. இவர், பூ, கண்டேன் காதலை, அவள் பெயர் தமிழரசி, சகுனி, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். 

வி ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் முத்தையாவே தயாரித்துள்ளார். இந்தப் படத்தை வினியோகஸ்தர் சுப்பிரமணியம் வாங்கி பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக இருந்தார். வரும் 12-ம் தேதி ரிலீஸ் ஆவதாக விளம்பரமும் வெளியானது. இதற்காக, தமிழகம் முழுவதும் 100 தியேட்டர் புக் செய்யப்பட்டிருந்தது. ஆனால், சூர்யா நடித்துள்ள ’தானா சேர்ந்தக் கூட்டம்’, விக்ரம் நடித்துள்ள ’ஸ்கெட்ச்’ படங்களும் அதே தேதியில் ரிலீஸ் ஆவதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தியேட்டர் தருவதாக சொல்லியிருந்த தியேட்டர் உரிமையாளர்கள் பின் வாங்கிவிட்டதால் பட ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளது.