சினிமா

ஃப்லிம் ஃபேர் விருது விழா: கோலிவுட்டிலிருந்து விருது பெற்ற பிரபலங்கள் யார் யார்?

ஃப்லிம் ஃபேர் விருது விழா: கோலிவுட்டிலிருந்து விருது பெற்ற பிரபலங்கள் யார் யார்?

சங்கீதா

67-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் முதல்முறையாக பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், இதில் வெற்றிபெற்ற தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள் குறித்த விபரங்களை காணலாம்.

தேசிய விருதுகள் போன்றே முக்கிய விருதாக கருதப்படுவது ஃபிலிம் ஃபேர் விருதுகள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில், சிறப்பான திறமையை வெளிப்படுத்திய திரைப்பட கலைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விருது விழாவை முன்னிட்டு, இந்தாண்டுக்கான 67-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் விழா, நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற கோலிவுட் பிரபலங்கள் பற்றிக் காணலாம்.

கோலிவுட் (தமிழ்)

1. சிறந்த படம் - ஜெய் பீம்

2. சிறந்த இயக்குநர் - சுதா கொங்கரா (சூரரைப் போற்று)

3. சிறந்த நடிகர் - சூர்யா (சூரரைப் போற்று)

4. சிறந்த நடிகை - லிஜோமோல் ஜோஸ் (ஜெய் பீம்)

5. சிறந்த நடிகர் (Critics) - ஆர்யா (சார்பட்டா பரம்பரை)

6. சிறந்த நடிகை (Critics) - அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)

7. சிறந்த துணை நடிகர் - பசுபதி (சார்பட்டா பரம்பரை)

8. சிறந்த துணை நடிகை - ஊர்வசி (சூரரைப் போற்று),

9. சிறந்த இசையமைப்பாளர் - ஜிவி பிரகாஷ் (சூரரைப் போற்று)

10. சிறந்த பாடலாசிரியர் - அறிவு (நீயே ஒளி - சார்பட்டா பரம்பரை)

11. சிறந்த பாடகர் - கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ் (ஆகாசம் - சூரரைப் போற்று)

12. சிறந்த பாடகி - தீ (காட்டுப் பயலே -சூரரைப் போற்று)

13. சிறந்த ஒளிப்பதிவாளர் - நிகேத் பொம்மிரெட்டி (சூரரைப் போற்று)

14. சிறந்த நடன அமைப்பாளர் - தினேஷ் குமார் (வாத்தி கம்மிங் - சூரரைப் போற்று)

தெலுங்கு திரையுலகில் ‘புஷ்பா: தி ரைஸ்’ படம் 7 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த பாடகர் (ஸ்ரீவள்ளி), சிறந்த பாடகி (ஊ அண்டவா), சிறந்த ஒளிப்பாதிவாளர், சிறந்த இசையமைப்பாளர் என 7 பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது. மேலும் அல்லு அர்ஜூனின் ‘ஆலா வைகுந்தபுரம்லோ’ திரைப்படம் 3 விருதுகளை பெற்றுள்ளது.

மலையாளத்தில் ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம் 4 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த பாடலாசிரியர், சிறந்த துணை நடிகை ஆகியப் பிரிவுகளில் இந்தப் படம் விருது பெற்றுள்ளது. மேலும் வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மற்றும் அல்லு அர்ஜூனின் தந்தையும், தெலுங்கு தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த்துக்கு வழங்கப்பட்டுள்ளது.