சினிமா

4 நாட்களில் 1‌‌‌0‌0‌‌ கோடி‌ ரூபாய்‌‌ வசூலைத் தாண்டிய கேஜிஎஃப்

4 நாட்களில் 1‌‌‌0‌0‌‌ கோடி‌ ரூபாய்‌‌ வசூலைத் தாண்டிய கேஜிஎஃப்

webteam

கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கேஜிஎஃப் திரைப்படம் நான்கு நாட்களில் 1‌‌‌0‌0‌‌ கோடி‌ ரூபாய்‌‌ வசூலைத் தாண்டியுள்ளது. 

இயக்குநர் பிரசாந்த் நீல் தயாரிப்பில் கன்னட திரையுலகில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎஃப். இந்த படத்தில் கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ‌‌‌இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சீனா, ஜப்பான் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.. பணக்காரனாக துடிக்கும் ஒரு சிறுவன் கேங்க்ஸ்டராக மாறுவதும், பின்னர் தங்கச்சுரங்கத்தை நிர்வகிக்கும் வில்லனை கொல்வதற்காக அவன் இடத்துக்கே செல்லும் கதாநாயகன் அங்கு அடிமைப்பட்டு கிடக்கும் மக்களுக்காக வருந்துவதும், அதன் பின் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும் என மாஸ் சினிமாவாக உருவாகியுள்ளது கேஜிஎஃப்.

படத்தின் நீளம், தேவையில்லாத காதல் காட்சிகள் என சில குளறுபடிகள் இருந்தாலும் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் சுமார் ஆயிரத்து 500 திரையரங்குகளில் வெளியாகி உள்ள‌ கேஜிஎஃப் திரைப்படம்‌ நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

பாகுபலி படத்தை போல பலவிதமான கேள்விகளுடன் கேஜிஎஃப் திரைப்படத்தின் முதல் பாகம் முடிவடைகிறது. அடுத்தப்பாகத்தில் தான் படம் முழுவதும் முற்றுப்பெறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் கேஜிஎஃப்பின் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.