சினிமா

’கேஜிஎஃப் 2’: ரூ. 7 கோடிக்கு ஆடியோ உரிமையை கைப்பற்றிய லஹரி மியூஸிக்

’கேஜிஎஃப் 2’: ரூ. 7 கோடிக்கு ஆடியோ உரிமையை கைப்பற்றிய லஹரி மியூஸிக்

sharpana

’கேஜிஎஃப் 2’ படத்தின் ஆடியோ உரிமையை  லஹரி மியூசிக் நிறுவனம் வாங்கிள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’  டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் சாதனைகளையும் செய்தது.

அதனையொட்டி, வரும் ஜூலை 16 ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படாததால் செப்டம்பர் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், இன்று ’கேஜிஎஃப் 2’ படத்தின் 6 பாடல்கள் கொண்ட தென்னிந்திய ஆடியோ உரிமையை பிரபல லஹரி மியூசிக் நிறுவனம் 7 கோடியே 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. ’கேஜிஎஃப் 2’ தயாரிப்பாளர் விஜய் கிர்கண்டுவுடன் லஹரி மியூசிக் நிறுவனத்தினர் ஆடியோ உரிமைத்தை பெற்ற ஒப்பந்தத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.