ஒரேயொரு வீடியோதான்... ஆனால் தற்போது சமூக வலைத்தளவாசிகள் கொண்டாடி தீர்க்கும் அளவிற்கு இணையத்தில் வைரலாக வருகிறார் கேரள நடிகை பிரியா வாரியர்ஸ்..
கேரள பெண்களுக்கும் தமிழக இளைஞர்களுக்கும் அப்படி என்னதான் பொருத்தமோ..? அவர்களின் சின்னச் சின்ன அசைவுகளில் அப்படியே மல்லாக்காய் படுத்துவிடுகின்றனர். கோலிவுட்டில் நம்பர் 1 ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாராவின் பூர்வீகம் கேரளாதான். சர்ச்சைக்கு பெயர்போன அந்த நாயகியை தமிழக இளைஞர்கள் கொண்டாட ஒருநாளும் தவறியதில்லை. அதனால் அவருக்கு எப்பவுமே தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடம்தான்.
அதேபோல தனது நடிப்பால் மக்களை கவரவில்லையென்றாலும் கூட பிக்பாஸ் என்ற ஒற்றை நிகழ்ச்சி மூலம் மக்களை கவர்ந்தவர் நடிகை ஓவியா. இவரும் கேரள வரவுதான். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரத்தில் ஓவியாவை சமூக வலைத்தள வாசிகள் தலையில் வைத்து கொண்டாடினார். அவர் பேசிய சின்ன சின்ன வார்த்தைகளை கூட (நீங்க ஷட்டப் பண்ணுங்க) இணையதளவாசிகள் ட்ரெண்டாக்கினர்.
அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன் இணையத்தில் ட்ரெண்டானவர் ஜிமிக்கி கம்மல் ‘ஷெரில்’. இவரும் கேளராவை சேர்ந்தவரே. மோகன்லால் நடித்த ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு அவர்போட்ட ஆட்டம் உலகம் முழுவதும் பிரபலமானது. ஷெரிலை பின்பற்றி அதேபோன்ற நடனத்தை பலரும் ஆடி அதனையும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் வெளிவரவுள்ள ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தில் ‘மாணிக்ய மலர்யா பூவி’ என்கிற பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடலுக்கு அப்படத்தில் நடித்துள்ள பிரியா பிரகாஷ் வாரியர், க்யூட்டான ரியாக்ஷனை வெளிப்படுத்தியுள்ளார். இதனைத்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். காரணம் அவரின் கண் அசைவு அப்படி. யூடியூப்பில் இந்தப் பாடலை கிட்டத்ததட்ட 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள கமெண்ட்டுகளில் தங்களுக்கு மலையாளம் தெரியாது. இருப்பினும் இந்தப் பெண்ணுக்காகவே பார்க்கிறோம் என கூறியுள்ளனர். மேலும் பிரியா வாரியர்ஸை வைத்து எண்ணற்ற மீம்ஸ்களும் பறக்கின்றன. ‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இந்தப் பெண்ணை விரும்புவான்’ என்றும், ‘ச்ச.. என்ன பொண்ணுடா,,’ என்பது போன்ற ஏகப்பட்ட பதிவுகளும் ட்விட்டரில் பிரியா வாரியர்ஸை புகழ்ந்து பறக்கின்றன.