சினிமா

இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா? - கரு பழனியப்பன்

webteam

இயக்குநர் சங்கத்துக்குள் ஏராளமான காலி மது பாட்டில்கள் உள்ளன எனவும் இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா? எனவும் கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பினார். 

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க பொதுக்குழு கூட்டம் வடபழனியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாரதிராஜா தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்தது குறித்த விவாதத்தை செயலாளர் செல்வமணி முன்வைத்தார். இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றவும் தலைவர் பதவியின் தேர்தலை வரும் 21 ஆம் தேதி நடக்கவிருக்கிற தேர்தலோடு சேர்த்து நடத்தலாம் என்பதற்கான ஒப்புதல் பெற வேண்டியும் உறுப்புனர்களின் ஒப்புதலை கேட்டிருந்தார். 

இதையடுத்து எப்படி எங்களை கேட்காமல் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு நீங்கள் கேட்டீர்கள் என்ற ரீதியில் கரு. பழனியப்பன் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

கரு.பழனியப்பன், பேசுகையில், இயக்குநர் சங்கத்துக்குள் ஏராளமான காலி மது பாட்டில்கள் உள்ளன எனவும் இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா? எனவும் கேள்வி எழுப்பினார். 

“இயக்குநர் சங்க பொதுக்குழுவிற்கு பெரும்பாலும் வராத பாரதிராஜா, கடந்தமுறை மட்டுமே வந்தார். பாரதிராஜாவால்தான் தமிழ் சினிமாவின் முகம் மாறியது. அதற்காக அவரை சாமியாக கும்பிட வேண்டும் என அவரே விரும்பியதில்லை. அவரை இங்கு அழைத்து வந்து அவமானப்படுத்த வேண்டாம்” என கரு.பழனியப்பன் பேசினார். மேலும் பாரதிராஜா மீது மரியாதை இருப்பதாகவும் அவரும் தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற ரீதியில் பழனியப்பன் கருத்து தெரிவித்தார். கரு.பழனியப்பனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் நடைபெற்றது.