சினிமா

பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் என்னை தொந்தரவு செய்கிறது - ‘அடங்கமறு’ இயக்குநர் வேதனை

பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் என்னை தொந்தரவு செய்கிறது - ‘அடங்கமறு’ இயக்குநர் வேதனை

webteam

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகளை வாய்ப்பு கிடைத்தால் அவர்களின் பெற்றோர் கண் முன்பே
எரித்து விடுவேன் என அடங்கமறு படத்தின் இயக்குநர் கார்த்திக் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரையும்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை குண்டர்
சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக திரைபிரபலங்களும், அரசியல் கட்சியினரும், பொது மக்களும், சமூக வலைதளவாசிகளும் கொந்தளித்து வருகின்றனர். 

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என அடங்கமறு இயக்குநர் கார்த்திக் தங்கவேல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகளை வாய்ப்பு கிடைத்தால் அவர்களின் பெற்றோர் கண் முன்பே எரித்து விடுவேன். பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்கிறது. விசாரணை நடத்தி தாமதிக்க வேண்டாம். உடனே குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

வன்கொடுமை செய்த இளைஞர்களை அவர்களது பெற்றோர் முன்பே கொல்வது போல் அடங்கமறு திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.