நடிகர் கார்த்தி மீண்டும் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கொம்பன்’. இதில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்தர். கிராமப் பின்னணியை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கார்த்தி ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இவர் மீண்டும் இதே இயக்குநர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனை 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ இயக்கத்தில் கார்த்தி நடிக்கின்றார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் இரண்டாவது முறையாக நடித்து வருகிறார். அதற்கான படப்பிடிப்புகள் தற்போது தாய்லாந்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் வேலைகள் முடிந்த பிறகு முத்தையா இயக்கத்தில் அவர் நடிப்பார் என்றும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே ‘ரெமோ’ இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்க உள்ள ‘சுல்தான்’ படத்திலும் கார்த்தி மும்முரமாக இருக்கிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஆக, கார்த்தியின் கால்ஷிட் புத்தகம் பரபரப்பாக இருக்கிறது.