சினிமா

மும்பையில் வாழ கங்கனா ரனாவத்துக்கு உரிமை இல்லை - அனில் தேஷ்முக்

மும்பையில் வாழ கங்கனா ரனாவத்துக்கு உரிமை இல்லை - அனில் தேஷ்முக்

Sinekadhara

மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் தங்குவதற்கு கங்கனா ரனாவத்துக்கு உரிமை இல்லை என மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியுள்ளார். மேலும் இந்த பாலிவுட் நடிகைமீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, மாஃபியா கொள்ளைக்காரர்களைவிட மும்பை போலீஸுக்குத்தான் அதிகம் பயப்படுவதாக கங்கனா டிவீட் செய்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக எம்.எல்.ஏ ராம் கதம் மகாராஸ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில், பாலிவுட் மற்றும் போதைப்பொருள் கும்பலுக்கு இருக்கும் தொடர்பை வெளிப்படுத்த தயாராக இருக்கும் கங்கனா ரனாவத்துக்கு பாதுகாப்பு தேவை என எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்து கங்கனா தனது டிவிட்டரில், ‘’உங்கள் அக்கறைக்கு நன்றி சார். திரைத்துறை மாஃபியாவைவிட இப்போது மும்பைப் போலீஸாருக்குத்தான் அதிகம் பயப்படுகிறேன். எனக்கு ஹிமாச்சல் பிரதேச அரசு அல்லது மத்திய அரசு மூலம்தான் பாதுகாப்பு தேவை. மும்பை போலீஸ் வேண்டாம்’’ என்று பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவுத், ‘’துரோகம், வெட்கக்கேடானது. இந்த நகரத்திலேயே வாழ்ந்துகொண்டு, இங்குள்ள போலீஸாரையே பழித்துள்ளார் என விமர்சித்தார். மேலும் தயவுசெய்து மும்பைக்கு வரவேண்டாம். இது மும்பை போலீஸை அவமதிப்பதைத் தவிர வேறில்லை. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த கங்கனா டிவிட்டரில், ‘’ மும்பை வீதிகளில் ஆசாதி கிராஃபிடிஸை அடுத்து இப்போது சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத், மும்பைக்கு வரவேண்டாம் என எனக்கு வெளிப்படையான அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளார். ஏன் மும்பையும் பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்தது போல் உணரவைக்கிறது?’’ என்று எழுதியுள்ளார்.

இதற்கு தனது டிவிட்டரில் பதிலளித்த மும்பை உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ‘’மும்பை போலீஸ் ஸ்காட்லாந்து போலீஸுக்கு நிகரானது. சிலர் மும்பை போலீஸை குறிவைக்கிறார்கள். இதற்கு எதிராக ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். கங்கனாவுக்கு மும்பையில் வாழ உரிமை இல்லை. மேலும் இந்த பாலிவுட் நடிகைமீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.