“என்மீதான அன்பால் தனது இல்லத்திற்கு ’கமல் இல்லம்’ என்று பெயர் வைத்த நிபந்தனையற்ற பேரன்பினைப் பொழிந்த அண்ணனை இழந்துவிட்டேன்” என்று நடிகர் கமல்ஹாசன் மறைந்த பழம்பெரும் இயக்குநர் ஜி.என் ரங்கராஜனுக்கு உருக்கமுடன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
‘கல்யாணராமன்’, ‘கடல் பூக்கள்’, ’எல்லாம் இன்பமயம்’, மீண்டும் கோகிலா என கமல்ஹாசனை வைத்து 9 படங்கள் இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் ஜி.என் ரங்கராஜன் இன்று உயிரிழந்தார். அவரது, மறைவையொட்டி திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில்,“நான் சினிமாவுக்கு நுழைந்தகாலம் தொட்டு இறக்கும் தருவாய்வரை என் மீது மாறாத பிரியம் கொண்டவர் இயக்குனர் ஜி.என். ரங்கராஜன். கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கிக்கொண்டவர். இன்றும் விரும்பிப் பார்க்கப்படும் பல திரைப்படங்களை சினிமா ரசிகர்களுக்கு தந்தார்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன். இயக்குனர் ஜி.என்.ரங்கராஜனுக்கு அஞ்சலி. <a href="https://t.co/OmTzQqpdL5">pic.twitter.com/OmTzQqpdL5</a></p>— Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/1400374017861685251?ref_src=twsrc%5Etfw">June 3, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
கல்யாண ராமன், மீண்டும் கோகிலா, கடல்மீன்கள், எல்லாம் இன்பமயம், மகாராசன் என பல வெற்றிப்படங்களைத் தந்தவர். என் மீது கொண்ட மாறாத அன்பால் தான் கட்டிய இல்லத்திற்கு கமல் இல்லம் என்று பெயர் வைத்தார். இன்று, அந்த வீட்டிற்கு சற்றேரக்குறைய 30 வயதாகியிருக்கும். சினிமாவில் மட்டுமல்ல, மக்கள் பணியிலும் என்னை வாழ்த்தியவர்.நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஒரு அண்ணனை இழந்துவிட்டேன். அண்ணி ஜக்குபாய்க்கும் தம்பி குமரவேலனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று உருக்கமுடன் கூறியிருக்கிறார்.